Virat Kohli: அவுட்டாக்குனது ஒரு குத்தமா? சங்வான் மீது கோலி ரசிகர்கள் சைபர் அட்டாக்!
Virat Kohli ரஞ்சி கோப்பையில் 6 ரன்னில் விராட் கோலியை போல்டாக்கியதை கொண்டாடிய பந்துவீச்சாளர் ஹிமான்சு சங்வானை விராட் கோலி ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகி்னறனர்.

Virat Kohli: இந்திய கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் பேட்ஸ்மேனாக உலா வருபவர் விராட் கோலி. பார்டர் கவாஸ்கர் டிராபித் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, இழந்த ஃபார்மை மீட்பதற்காக விராட் கோலி மீண்டும் ரஞ்சிப் போட்டிக்குத் திரும்பினார்.
6 ரன்னில் அவுட்டான கோலி:
இந்த தொடரில் டெல்லி அணிக்காக அவர் களமிறங்கியுள்ளார். ஆயுஷ் பதோனி தலைமையிலான டெல்லி அணி ரயில்வேஸ் அணியுடன் மோதி வருகிறது. இந்த போட்டியில் ரயில்வே அணி 241 ரன்களுக்கு அவுட்டாகிய நிலையில், இன்று டெல்லி அணி களமிறங்கியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய விராட் கோலி 6 ரன்னில் அவுட்டானார்.
விராட் கோலியை 29 வயதான ஹிமான்சு சங்வான் என்ற பந்துவீச்சாளர் போல்டாக்கினார். அவரது பந்தில் கோலி போல்டானபோது அவரின் ஸ்டம்பு பறந்து சென்றது. அப்போது, விராட் கோலியை மகிழ்ச்சியில் சங்கவான் ஆர்ப்பரித்தார். கோலி வெறும் 6 ரன்னில் அவுட்டானது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
சங்வான் மீது சரமாரி அட்டாக்:
இந்த நிலையில், கோலியின் ரசிகர்கள் சிலர் ஹிமான்சு சங்கவானை மிக மோசமாக இணையத்தில் தாக்கி வருகின்றனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்று அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மிக மோசமான வார்த்தைகளால் தரக்குறைவாக விராட் கோலியின் ரசிகர்கள் சங்வானை விமர்சித்து வருகின்றனர்.
Harish Sangwan Knocked Out Virat King Kohli , At The Score of 6 (Full Crowd Reaction + Celebration) #ViratKohli𓃵 | #ViratKohli pic.twitter.com/QBHLRfsLKb
— 𝐒𝐑𝐈𝐉𝐀𝐍 🇮🇹 (@LegendDhonii) January 31, 2025
சமீபமாக சில ஆண்டுகளில் இணையதளங்களில் ஸ்டார் ப்ளேயர்களாக கருதப்படும் தோனி, ரோகித், விராட் கோலி போன்ற வீரர்களின் ரசிகர்கள் சிலர் தங்களுக்கு பிடித்த வீரர்களை யார் விமர்சித்தாலும் அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், ஒரு வீரரின் ரசிகர் மற்ற வீரரின் ரசிகரை மிக மோசமாக விமர்சிப்பதும் அதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல என்று கிரிக்கெட் நிபுணர்களும், நீண்ட காலமாக கிரிக்கெட் ரசிகர்களாக இருப்பவர்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
ஆயுஷ் பதோனி அபாரம்:
ரஞ்சியில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி, இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் மிக மோசமாக அவுட்டாகியிருப்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தினாலும், அடுத்த இன்னிங்சில் சிறப்பாக ஆடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்ப்பதற்காகவே மைதானத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர்.
இந்த போட்டியில் டெல்லி அணிக்காக ஆயுஷ் பதோனி 99 ரன்கள் விளாசி அவுட்டாக, 327 ரன்களுடன் டெல்லி அணி ஆடி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

