மேலும் அறிய
Advertisement
Job fair 2024: வேலை இல்லாத இளைஞர்களே இது உங்களுக்குத்தான்... இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க
இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் ஆகியவையும் வழங்கப்படும்.
வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 15.11.2024 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, சிங்கம்புணரி என மாவட்டம் முழுவதும் வேலை வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது என சொல்லப்பட்டுகிறது. இதனால் பலரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பையே நம்பும் சூழல் உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 15.11.2024 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகின்ற 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.
வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்
மேலும், இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பபடிவம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் மாவட்டத்தில் வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion