(Source: ECI/ABP News/ABP Majha)
SBI PO Prelims Result 2023: எஸ்.பி.ஐ. வங்கி வேலை;வெளியானது முதல்நிலை தேர்வு முடிவுகள்? எப்படி பார்ப்பது?
SBI PO Prelims Result 2023: பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரி வேலைவாய்ப்பிற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியின் ப்ரொபேஷனரி அதிகாரி (Probationary Officers) வேலைவாய்ப்பிற்கான முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
எஸ்.பி.ஐ. புரோபேசனரி அதிகாரிகள் 2,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
எப்படி காண்பது?
https://sbi.co.in/web/careers/crpd/po-pre-2023 - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான தகவல்களை பூர்த்தி செய்து தேர்வு முடிவுகளை காணலாம்.
பதிவு எண் (Registration Number/ Roll Number') பிறந்த தேதி (Date of Birth) உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து தேர்வு முடிவுகளை தரவிறக்கம் செய்யலாம்.
எழுத்து தேர்வில் மைனஸ் மார்க் இருக்கிறதா?
எழுத்துத் தேர்வில் தவறான பதில்களுக்கு 1/4 மார்க் மைனஸ் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான பயிற்சி:
நவம்பர்/டிசம்பர் 2022
டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்
முதன்மை எழுத்துத் தேர்வு:
2023 ஜனவரி/பிப்ரவரி
திறனறிவுத் தேர்வு:
2023 பிப்ரவரி/மார்ச் - நேர்முகத் தேர்வு
2023 பிப்ரவரி/மார்ச் -இறுதி பட்டியல்
முதன்மை தேர்வு:
இறுதித் தேர்வு:
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://bank.sbi/careers / https://www.sbi.co.in/careers
முக்கிய தேதிகள்
விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/36548767/060923-1_detailed+Advt.+English+PO+23-24_07.09.2023.pdf/9c9b6e4b-9fdd-df11-3194-d40cdb336aac?t=1694002437061 -லிங்கை கிளிக் செய்யவும்.
BHEL Recruitment 2023 :
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனத்தில் ' முதன்மை ஆலோசகர்' பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரங்கள்:
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பணிபுரிய முதன்மை ஆலோசகர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணி இடம்:
இந்த வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
ஊதிய விவரம்:
இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ. 1,25,000 மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி:
AMIE, பொறியியல், பி.டெக்., எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு ஆண்டுகால பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ரயில்வே துறையில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள், மெட்ரோ பணியில் வேலை பார்த்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 63 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்:
இது ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி. பணிதிறன் அடிப்படயில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2023
அதிகாரப்பூர்வ இணையதள முகவரி- https://drive.google.com/file/d/1yqycf84GTYoSioqqJ_Xa1vUDsN4EdeYW/view - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.