மேலும் அறிய

SVPISTM Recruitment: விண்ணப்பித்துவிட்டீர்களா? வரும் 25-ம் தேதி நேர்காணல்; கல்லூரி வேலை - முழு விவரம்

SVPISTM Recruitment: கோயம்புத்தூரில் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் விண்ணப்பிக்க வரும் 23-ஆம் தேதியே கடைசியாகும்.

கோயம்புத்தூரில் சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் (Sardar Vallabhbhai Patel International School of Textiles & Management) ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும். 

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி கல்லூரியில் நிர்வாகம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது ஓராண்டு கால ஒப்பந்த பணி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்

அலுவலக உதவியாளர் 

ஜூனியர் அசிஸ்டண்ட் லெவல்-2

ஜூனியர் அசிஸ்டண்ட் அக்கவுண்ட்ஸ்

கண்காணிப்பாளர் - சிவில்

கண்காளிப்பாளர் - எலக்ட்ரிக்கல்

பன்முக உதவியாளார் 

கல்வித் தகுதி:

  • அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
  • ஷார்ஹேண்ட் 100/ நிமிடத்திற்கு தெரிந்திருக்க வேண்டும். டைப் ரைட்டிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • இந்தி தெரிந்தவராக இருந்தால் சிறப்பு.
  • ஜூனியர் அசிஸ்டெண்ட் லெவல் -2 பணிக்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். நல்ல மொழியாளுமை கொண்டவராக இருக்க வேண்டும். 
  • சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு ஆண்டு காலம் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
  • இந்தி, Tally தெரிந்திருந்திருப்பது கூடுதல் சிறப்பு.
  • ஜூனியர் அசிஸ்டெண்ட் பணிக்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Tally  தெரிந்திருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இந்தி பேச எழுத தெரிந்திருக்க வேண்டும். 
  • கண்காணிப்பாளர் பணிக்கு சிவில், எலக்டிரிக்கல் பொறியியல் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 
  • பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-வது 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவியாளராக 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். 
  • இந்தப் பணியிடங்களுக்கு அரசு மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணியாற்றியவர்களாக இருந்தால் நல்லது. 

ஊதிய விவரம்

  • அலுவலக உதவியாளர் - ரூ.33,740
  • ஜூனியர் அசிஸ்டண்ட் லெவல்-2 -ரூ.25,820
  • ஜூனியர் அசிஸ்டண்ட் அக்கவுண்ட்ஸ் -ரூ. 23,322
  • கண்காணிப்பாளர் - சிவில்-ரூ.23,322
  • கண்காளிப்பாளர் - எலக்ட்ரிக்கல் - ரூ.23,322
  • பன்முக உதவியாளர் - ரூ.17,830

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

The Director,
Sardar Vallabhbhai Patel International
School of Textiles & Management,
1483, Avinashi Road, Peelamedu,
Coimbatore – 641 004. Tamilnadu.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 23.09.2023

நேர்காணல் நடைபெறும் நாள் - 25.09.2023

நேர்காணல் நடைபெறும் முகவரி:

Conference Hall, 
1st floor Administrative Block, 
SVPISTM, 
Coimbatore – 641 004

நேர்காணலுக்கு என்ன கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தகவல்களை- https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/33RECRUITMENT%20NOTIFICATION%20-%202.pdf - என்ற இணைப்பை பயன்படுத்தி காணலாம்.

உடனே விண்ணப்பிங்க..BDL Recruitment: பொறியியல் படித்தவர்களுக்கு மத்திய அரசு நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிக்க இன்றே கடைசி..

எஸ்.பி.ஐ. வேலைவாய்ப்பு பற்றிய தகவலுக்கு கிள்க் செய்யவும்

SBI PO Recruitment 2023: 2,000 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ.வங்கியில் வேலைவாய்ப்பு; முழு விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
மீண்டும் மீண்டும் அட்டூழியம்! அடங்காத இலங்கை கடற்படை! அடைக்கப்படும் தமிழக மீனவர்கள்! இன்று 10 பேர்!
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Tirupati Stampede: பகவானுக்கு கண்ணில்லையா..! திருப்பதி கோயிலில் கூட்ட நெரிசல், தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பலி, காரணம் என்ன?
Pongal Gift 2025: தமிழகமே ஹாப்பி..! பொங்கல் பரிசு தொகுப்பு, முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..
Pongal Gift 2025: தமிழகமே ஹாப்பி..! பொங்கல் பரிசு தொகுப்பு, முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Today Power Cut: தமிழகத்தில் இன்று ( 09.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் லிஸ்ட் !
Embed widget