மேலும் அறிய

RBI Recruitment: ரிசர்வ் வங்கியில் வேலை; 650 உதவியாளர் பணியிடங்கள்- உடனே விண்ணப்பிங்க! கடைசி தேதி நெருங்குது!

RBI Recruitment: ஆர்பிஐயில் நாடு முழுவதும் மொத்தம் 650 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்ரவரி 16, 2026) தொடங்கியுள்ளது.

வங்கித் துறையில் அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சியான செய்தி. இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி 2025-ம் ஆண்டிற்கான உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 650 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்ரவரி 16, 2026) தொடங்கியுள்ளது.

முக்கிய தேதிகள்

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி: 16 பிப்ரவரி 2026
  • விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 08 மார்ச் 2026
  • ஆன்லைன் கட்டணம் செலுத்தக் கடைசி தேதி: 08 மார்ச் 2026
  • முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam): 11 ஏப்ரல் 2026 (உத்தேச தேதி)
  • முதன்மைத் தேர்வு (Main Exam): 07 ஜூன் 2026 (உத்தேச தேதி)

எனினும் நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்வு தேதிகளில் மாற்றம் ஏற்படலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 எங்கெல்லாம் பணியிடங்கள் உள்ளன?


இந்த 650 பணியிடங்கள் சென்னை, திருவனந்தபுரம், அகமதாபாத், பெங்களூரு, போபால், சண்டிகர், கவுகாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், லக்னோ, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், டெல்லி மற்றும் பாட்னா ஆகிய நகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வேறு எந்த வழியிலும் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  1. முதலில் rbi.org.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
  2. அதில் ‘Opportunities@RBI’ அல்லது 'Recruitment' என்றபிரிவைகிளிக்செய்யவும்.
  3. 'RBI Assistant – Panel Year 2025' என்றஇணைப்பைத்தேர்வுசெய்யவும்.
  4. அதில்உள்ளமின்னஞ்சல்முகவரிமற்றும்மொபைல்எண்ணைப்பயன்படுத்திப்பதிவுசெய்யவும்.
  5. விண்ணப்பப்படிவத்தில்கேட்கப்பட்டுள்ளவிவரங்களைச்சரியாகப்பூர்த்திசெய்து, புகைப்படம்மற்றும்கையொப்பத்தைப்பதிவேற்றம்செய்யவேண்டும்.
  6. தேர்வுக்கட்டணத்தைஆன்லைனில்செலுத்திவிண்ணப்பத்தைச்சமர்ப்பிக்கவும்.

எதிர்காலத் தேவைக்காகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலைத் தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

வங்கித் தேர்வுகளிலேயே ரிசர்வ் வங்கி உதவியாளர் பணிக்குக் கடுமையான போட்டி நிலவும் என்பதால், தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

கூடுதல் தகவல்களுக்கு: rbi.org.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget