மேலும் அறிய

Post Office Recruitment: 10வது பாஸா நீங்க? தேர்வு கிடையாது... போஸ்ட் ஆபிஸில் வேலை- உடனே அப்ளை செய்ங்க!

India Post GDS Recruitment 2026: அஞ்சல் துறையில் கிராமின் டக் சேவக் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்.2) தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அஞ்சல் வட்டங்களில் காலியாக உள்ள கிராமின் டக் சேவக் (GDS) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று (பிப்.2) தொடங்கியுள்ளது. இதன்படி, 28,740 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் இன்று முதல் பிப்ரவரி 16ஆம் தேதி வரை விண்ணப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். பிப்ரவரி 18 முதல் 19ஆம் தேதி வரை திருத்தம் மேற்கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தரவரிசைப் பட்டியல் (Merit List) பிப்ரவரி 28, 2026 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன பதவிகள்?

இந்தப் பதவிகளுக்கு கிளை அஞ்சல் அதிகாரி (BRANCH POSTMASTER- BPM), உதவி கிளை அஞ்சல் அதிகாரி (ASSISTANT BRANCH POSTMASTER - ABPM) மற்றும் தபால் விநியோகம் செய்யும் கிராமின் டக் சேவக் (GDS) ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஊதியம் எவ்வளவு?

கிளை அஞ்சல் அதிகாரி – ரூ.12,000/- ரூ.29,380/-

உதவி கிளை அஞ்சல் அதிகாரி/ கிராமின் டக் சேவக் – ரூ.10,000/- ரூ.24,470/-

தேர்வு கிடையாது

இந்த வேலைக்கான முக்கிய அம்சம் தேர்வு கிடையாது என்பதுதான். பொதுவாக அரசு வேலை என்றாலே கடினமான போட்டித் தேர்வுகள் இருக்கும். ஆனால், இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வுகள் எதுவும் கிடையாது.

பிற தகுதிகள் என்ன?

கணினி அறிவு

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது

யார் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். மதிப்பெண்களைக் கொண்டு மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 18 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளுக்கும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Post Office Recruitment: 10வது பாஸா நீங்க? தேர்வு கிடையாது... போஸ்ட் ஆபிஸில் வேலை- உடனே அப்ளை செய்ங்க!

என்னென்ன ஆவணங்கள் தேவை?

  • மதிப்பெண் பட்டியல்
  • அடையாளச் சான்று
  • சாதிச் சான்றிதழ்
  • PwBD சான்றிதழ்
  • EWS சான்றிதழ்
  • திருநங்கைச் சான்றிதழ்
  • பிறந்த தேதிச் சான்று

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் indiapostgdsonline.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, உங்கள் விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க பிரத்யேகமாக https://indiapost.gov.in/gdsonlineengagement என்ற இணைய முகவரி உருவாக்கப்பட்டு உள்ளது.

அல்லது நேரடியாக https://app.indiapost.gov.in/gdscandidate என்ற இணைப்புக்குச் சென்று முன்பதிவு செய்தும் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான விரிவாக அறிவிக்கை https://indiapost.gov.in/gdsonlineengagement/pdf/descriptive-notification.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தகவலுக்கு: indiapostgdsonline.gov.in

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget