Job Alert:உதவிப் பேராசிரியர் வேலை; ரூ.2.2 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?
Job Alert: மத்திய அரசு கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர் வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரா மெடிக்கல் எடுகேசன் மற்றும் ரிசர்ச் (National Institutes of Pharmaceutical Education and Research) நிறுவனத்தில் உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விரவரம்
பேராசிரியர்
இணைப் பேராசிரியர்
உதவிப் பேராசிரியர்
கல்வித் தகுதி:
Pharmaceutical துறையில் பி.ஹெச்டி முடித்திருக்க வேண்டும்.
பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது நல்லது.
இணைப் பேராசிரியர் பணிக்கு 8 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
உதவிப் பேராசிரியர் பணிக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
பேராசிரியர் - ரூ.1,59,100 - ரூ.2,20,200/-
இணை பேராசிரியர் - ரூ.1,39,600 - ரூ.2,11,300/-
உதவி பேராசிரியர் -ரூ.1,01,500 - ரூ.1,67,400/-
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சுய விவர குறிப்பு, தேவையான ஆவணங்களின் சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை recruitmentcell@niper.ac.in - என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர் / PwBD / மகளிர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு விவரம்:
தெரிவு செய்யப்படும் முறை:
இந்த வேலைவாய்ப்பிற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படும்.
இதற்கு இரண்டு ஆண்டுகள் Probation காலம் ஆகும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://niper.gov.in/2024_adv_3_06April.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.