Job Alert: சட்டம் படித்தவரா? அரசு அலுவலகத்தில் வேலை; எவ்வளவு ஊதியம் - முழு விவரம்!
Job Alert: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.
நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள சட்ட / நன்னடத்தை அதிகாரி பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
சட்ட / நன்னடத்தை அதிகாரி
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க B.L or L.L.B படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
பணி தொடர்பான அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.27,804 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி சான்றிதழ் நகல்களுடன் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
https://www.nagapattinam.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை https://www.nagapattinam.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
District Child Protection Officer,
District Child Protection Unit,
Room No: 209 2nd Floor,
Collectorate Campus,
Nagapattinam-611003.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023
செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள சமூகப் பணியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
சமூகப் பணியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க சோஷியாலஜி, சோஷியல் சயின்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
பணி தொடர்பான அனுபவம் இருந்தால் கூடுதல் சிறப்பு.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.18,538 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கல்வி சான்றிதழ் நகல்களுடன் அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/11/2023111754.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண்.ஏ.80, 10-வது குறுக்குத் தெரு
அண்ணாநகர்,
செங்கல்பட்டு - 603 001
தொடர்புக்கு - 044- 35006105
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.11.2023
திருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
பணி விவரம்:
ஈப்பு ஓட்டுநர்
அலுவலக உதவியாளார்
பணியிடம் - கொரடாச்சேரி
கல்வி மற்றும் பிற தகுதிகள்..
ஈப்பு ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி தகுதி வாய்ந்த அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக தலைவர், பிரிவு தலைவர், பணியாளர்களின் உடனிருத்தல் கோப்புகள் எடுத்து செல்லுதல் மற்றும் பிற அலுவலக பணிகள் செய்தல்.
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/-
அலுவலக உதவியாளர் - ரூ.15,700/- ரூ. 50,100 (1300 GP)
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம், கொரடாச்சேரி
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://tirupathur.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/11/2023111732.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2023 மாலை 05.45 வரை