மேலும் அறிய

Muthalvar Marunthagam: மக்களே.. ரூ.3 லட்சம் மானியம்; வங்கிக்கடன் பெற உதவி! முதல்வர் மருந்தகம் அமைக்க அரசு அழைப்பு

Muthalvar Marunthagam Apply online: முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க விருப்பம்‌ உள்ள தொழில்‌ முனைவோர்‌, இணையதளம்‌ மூலம்‌ 05.02.2025 -க்குள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

சென்னை மாவட்டத்தில்‌ முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க இணையதளம்‌ மூலம்‌விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுவதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’தமிழ்நாடு முதலமைச்சர்‌ 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில்‌, "பொதுப்பெயர்‌ (ஜெனரிக்‌) மருந்துகளையும்‌, பிற மருந்துகளையும்‌ குறைந்த விலையில்‌ பொது மக்களுக்குக்‌ கிடைக்கச்‌ செய்யும்‌ வகையில்‌ முதற்கட்டமாக 1000 முதல்வர்‌ மருந்தகங்கள்‌ துவங்கப்படும்‌" என அறிவித்தார்‌.

முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க விருப்பமுள்ள பி.ஃபார்ம் / டி.ஃபார்ம் சான்று பெற்றவர்கள்‌ அல்லது அவர்களின்‌ ஒப்புதலுடன்‌, தமிழ்நாடு முழுவதும்‌ பொதுமக்கள்‌ பயன்‌ பெறும்‌ வகையில்‌ முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க விண்ணப்பிக்கலாம்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.

முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க விருப்பம்‌ உள்ள தொழில்‌ முனைவோர்‌, இணையதளம்‌ மூலம்‌ 05.02.2025 -க்குள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

அவ்வாறு பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ பரிசீலிக்கப்பட்டு, தகுதியின் அடிப்படையிலும்‌, முன்னுரிமை அடிப்படையிலும்‌ ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌.

என்ன ஆவணங்கள் தேவை?

முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க விருப்பம்‌ உள்ளவர்களுக்கு 110 சதுர அடிக்குக்‌ குறையாமல்‌ சொந்த இடம்‌ அல்லது வாடகை இடம்‌ இருக்க வேண்டும்‌. சொந்த இடம்‌, எனில்‌ அதற்கான சான்றிதழ்களான சொத்து வரி ரசீது (அல்லது) குடிநீர் வரி ரசீது (அல்லது) மின்‌ இணைப்பு ரசீது, வாடகை இடம்‌ எனில்‌, இடத்திற்கான உரிமையாளரிடம்‌ வாடகை ஒப்பந்தப்‌ பத்திரம்‌ பெற்று விண்ணப்பத்துடன்‌ இணைத்து விண்ணப்பிக்கலாம்‌.

முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்கும்‌ தொழில்‌ முனைவோருக்கு, அரசு மானியம்‌ரூ.3.00 லட்சம்‌ இரண்டு தவணைகளாக ரொக்கமாகவும்‌, மருந்துகளாகவும்‌ வழங்கப்படும்‌.

தொழில்‌ முனைவோருக்கு முதல்வர்‌ மருந்தகம்‌ அமைப்பதற்கு கூடுதல்‌ நிதி தேவைப்படும்‌ நிலையில்‌, கூட்டுறவு வங்கிகள்‌ மூலம்‌ கடன்‌ பெற வழிவகை செய்யப்படும்‌. TABCEDCO, TAHDCO மற்றும்‌ TAMCO பயனாளிகளும்‌ இதில்‌ விண்ணப்பிக்கலாம்‌.

மானியம் எப்படி விடுவிக்கப்படும்‌?

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்குப்‌ பயிற்சி அளித்து முதல்‌ தவணை மானியத்தொகை ரூ.1.50 இலட்சம்‌ விடுவிக்கப்படும்‌. முதல்வர்‌ மருந்தகம்‌ அமைக்க தெரிவு செய்யப்படும்‌ தொழில்‌ முனைவோர்‌, முதல்வர்‌ மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள்‌, குளிர்சாதனப் பெட்டி, ஏசி மற்றும்‌ மருந்துகள்‌ வைப்பதற்கான பெட்டிகள்‌ நிறுவிய் பிறகு, இறுதிக்கட்ட மானியம்‌ ரூ.1.50 இலட்சம்‌ மதிப்பிற்கு மருந்துகளாக வழங்கப்படும்‌.

விற்பனைக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.mudhalvarmarundhagam.tn.gov.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
Embed widget