Mega Job Fair: சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; முற்றிலும் இலவசம் - கலந்துகொள்வது எப்படி?
சென்னையில் நாளை நடைபெற உள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீர ராகவ ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையில் நாளை நடைபெற உள்ள மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை வேலை தேடும் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீர ராகவ ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
’’தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில் வேலை தேடுவோர் வேலை அளிக்கும் நிறுவனங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை பெற்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
வேலைவாய்ப்பு முகாம் எங்கே, எப்போது?
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.22 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளனர். இந்த வேலை வாய்ப்பு முகாம் சென்னை கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்கலாம்: Scholarship Scheme: மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50,000: மத்திய அரசு கல்வி உதவித்தொகைகள் என்னென்ன?- விவரம்
என்ன தகுதி?
இந்த முகாமில் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை, அறிவியல் படிப்புகள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதி பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப் பணி இடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். இந்த முகாம் வாயிலாக பணி நியமனம் பெரும் இளைஞர்களின் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
முற்றிலும் இலவசம்
வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் இதில் கலந்துகொள்ள எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை’’.
இவ்வாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீர ராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
*
இதையும் வாசிக்கலாம்:
BEL: பொறியியல் பட்டதாரியா? பெல் நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிக்க நாளையே கடைசி! https://tamil.abplive.com/jobs/bharat-electronics-limited-job-notification-for-the-post-of-project-engineer-know-the-details-81133