சென்னை துறைமுகத்தில் மருத்துவ அதிகாரிப்பணி.. விண்ணப்பிக்க டிச.31 கடைசி தேதி!
நேர்காணல் மூலம் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 2,20,000 வரை பணியின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் Senior Deputy Chief Medical Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை துறைமுகம் செயல்பட்டுவருகிறது. அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இத்துறைமுகம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கியக் காரணிகளுள் ஒன்றாக வளங்கிவருகிறது. . தற்போது சிங்கப்பூர், ஆங்காங், சாங்காய் ஆகிய துறைமுகங்களுடன் சென்னை துறைமுகத்தை ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது. தற்போது உலகின் 86 வது பெரிய கொள்கலன் துறைமுகமாக உள்ளது மற்றும் ஆண்டுக்கு சுமார் 140 மில்லியன் டன்களாக இதன்திறனை விரிவுபடுத்தத் திட்டங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்குள்ள அனைத்துத் ழிலாளர்களுக்காக செயல்பட்டுவரக்கூடிய மருத்துவமனையில் தற்போது Senior Deputy Chief Medical Officer பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
சென்னை துறைமுகத்தில் Senior Deputy Chief Medical Officer பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 2
கல்வித்தகுதி :
சென்னை துறைமுகத்தில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் MBBS, PG Diploma, PG Degree படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். 45 வயதிற்கு மேல் இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும். ஆர்வமும் உள்ள நபர்கள் சென்னை துறைமுகப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/sdcmo2021.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை முதலில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். மேலும் இப்பணிக்கு தேவையான அனைத்து சான்றிதழ்கள் நகலையும் இணைத்து வருகின்ற டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,
சென்னை துறைமுக அறக்கட்டளை,
ராஜாஜி சாலை,
சென்னை – 600 001.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
நேர்காணல் மூலம் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 2,20,000 வரை பணியின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.