(Source: ECI/ABP News/ABP Majha)
Malaysia Jobs: 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; மலேசியாவில் வேலை- ரூ.49 ஆயிரம் வரை ஊதியம்- அரசு அறிவிப்பு!
Malaysia Jobs: மலேசியாவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பற்றி காணலாம்.
மலேசியாவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு சென்னையில் உள்ள கிண்டியில் நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.
பணி விவரம்:
கட்டுமானப் பணியாளர், உதவியாளர், வெல்டர் ஆகிய பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
10-ம் வகுப்பு அல்லது அதற்கு கீழ் படித்துள்ள அனுபவம் அல்லது பணி அனுபவம் இல்லாத 50 வயதுக்கு உட்பட்டோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 22-50 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம்:
கட்டுமானப் பணியாளருக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம், கட்டுமான உதவியாளர் வேலைக்கு ரூ.28 ஆயிரம், வெல்டர் வேலைக்கு (வெல்டர் தகுதிச் சான்று வைத்திருப்பவர்களுக்கு மட்டும்) ரூ.40ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.27,246 - 49,547 மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும் உணவு, இருப்பிடம், விமானப் பயணச்சீட்டு, விசா ஆகியவை வேலை அளிக்கும் நிறுவனம் / நபர் ஆகியோரால் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் www.omcmanpower.tn.gov.in - என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். https://www.omcmanpower.tn.gov.in/registration.php?lang=tm - தனிதனியே லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும்.
மேலும் ovemclnm@gmail.com-என்ற மின்னஞ்சலுக்கு சுய விவர விண்ணப்பப் படிவம், கல்வி,பணி அனுபவச் சான்றிதழ், பாஸ்போர்ட் நகலுடன் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் (044-22505886, 22502267) மற்றும் வாட்ஸ் அப் எண்ணில் (9566239685) தொடர்பு கொள்ளலாம்.
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டால் மலேசியா செல்பவர்கள் விசா கிடைத்த பிறகு இந்த நிறுவனத்திற்கு சேவை கட்டணமாக ரூ.35,400 செலுத்த வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நாள் அறிவிப்பு வெளியிடப்படும்.
https://www.omcmanpower.tn.gov.in/jobInfo.php?jid=394&lang=tm - என்ற இணைப்பில் கூடுதல் விவரங்களை காணலாம்.