KVS Recruitment : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
KVS Recruitment : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,970 பணியிடங்களுக்கான (Limited Departmental competitive Examination (LDCE)) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:
பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் துறை சாந்த தேர்வுகள் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்:
TGT, PGT, PRT and non-teaching vacancies
துணை ஆணையர் (Assistant Commissioner)
பள்ளி முதல்வர் (Principal)
துணை முதல்வர் (Vice Principal)
நூலகர் (Librarian)
நிதி அதிகாரி (Finance Officer)
துணை பொறியாளர் (Assistant Engineer)
Assistant Section Officer,
இந்தி மொழிபெயர்பாளர் (Hindi Translator)
Senior Secretariat Assistant,
Junior Secretariat Assistant,
Stenographer Grade – III.
கல்வித் தகுதி:
பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)
புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கு விண்ணப்பிக்க www.kvsangathan.nic.in என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
விண்ணப்பக் கட்டணம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு https://kvsangathan.nic.in/employment-notice/limited-dept-exam வலைதள பக்கத்தில் உள்ள வேலைவாய்ப்பு பகுதியினைக் காணலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கணினி வழி ஆன்லைன் தேர்வு நடைபெறும்.
அறிவிப்பின் விவரம் அறிய-- https://kvsangathan.nic.in/employment-notice
இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனின் வரும் டிசம்பர்,5 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைனின் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2022 (இரவு 11.59 மணி வரை)
அறிவிப்பின் விவரத்திற்கான லிங்க்ஸ்:
https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Notification-_LDCE_2022._1.pdf
https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_02_09_11_2022_0.PDF
https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_01_16_11_2022_0.PDF