மேலும் அறிய

Jobs: வேலை இல்லை என்று கவலையா? காஞ்சிபுரத்தில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு துறை தனியார் துறையினருடன் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், காஞ்சிபுரம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரத்தில் 02.12.2023 அன்று நடைபெற உள்ளது.

இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ, 12வது மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். 18 முதல் 35 வயது வரை உள்ள வேலைநாடுநர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 02.12.2023 அன்று காலை 9.00 மணிக்கு பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரத்தில் நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும்.

இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 044-27237124 என்ற தொலைபேசி எண் வாயிலாக கேட்டறிந்து பயன் பெறுமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர். கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளார்கள்.

 

TN MRB Recruitment 2023: லேப் டெக்னீசியனா நீங்கள்? ரூ.71,000 மாத ஊதியம்; எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - முழு விவரம்!

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இம்மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப்பணியாளர்கள் சீனியாரிட்டி முறையில் தேர்வு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர்  கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைக்குத் தேவையாக அனைத்துப் பணியாளர்களையும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே பணியில் சேர முடியும் என அரசாணை வெளியிடப்பட்டதோடு தற்போது நடைமுறையில் உள்ளது.

இதோடு சில பணிகளுக்கு தேர்வு இல்லாமலும் பணியமர்த்தப்படுவார்கள் என்று உள்ளது. இந்நிலையில் தற்போது சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்றவற்றில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.


பணி விவரம்:

ECG Technicain

மொத்த பணியிடங்கள் - 10

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஓராண்டுகால Medical Laboratory Technology படிப்புகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக்கல்வி பயின்றிருக்க வேண்டும். 

அதோடு, Electro Cardiogram /  Treadmill Technician சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ. 71,900  வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-1)

பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆரம்ப கால ஊதியமாக ரூ.13,000 வழங்கப்படும், இரண்டு ஆண்டுக்கும் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

இரண்டு ஆண்டு பணிக்கு பிறகு ரூ.19,500 மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 01/07/2023  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

தேர்வு செய்யப்படும் முறை :

இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/  - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/notifications.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget