மேலும் அறிய
Jobs: மதுரை, தேனி சுகாதாரத்துறையில் வேலை.. உடனே அப்ளே பண்ணுங்க
தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் விண்ணப்பங்களை நேரிலோ மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம்.

சுகாதாரத்துறையில் வேலை
Source : whats app
பணியாளர் தேர்வானது தேசிய நலச் சங்க தேர்வு விதிகளில் தெரிவித்துள்ளபடி நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தகுதியின் அடிப்படையிலும் இனச் சுழற்சி முறையிலும் நியமிக்கப்படுவர்.
மதுரை மாவட்ட நலச் சங்க கட்டுப்பாட்டின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட நலவாழ்வு சங்க தலைவர் அவர்களால் ஆயுஷ் குழுமம், தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களான அறிவிப்பு.
1 ஒரு ஆயுஷ் மருத்துவ அலுவலர் (யுனானி) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.34,000/-வயது 59க்குள், BUMS பட்டம் படித்தவர்கள்.
2) ஒரு மருந்து வழங்குநர் பதவி காலியிடத்திற்கு தினக்கூலி ஊதியம் ரூ.750/- வயது 59க்குள் D.Pharm, Integrated Pharmacy course பட்டம் பெற்றவர்கள்.
3) மூன்று பல்நோக்குப் பணியாளர் பதவி காலியிடத்திற்கு தினக்கூலி ஊதியம் ரூ.300/-வயது 59க்குள் எட்டாம் வகுப்புத் தேர்ச்சி.
4) ஒரு பல்நோக்குப் பணியாளர் பதவி காலியிடத்திற்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.10,000/- வயது 59க்குள், எட்டாம் வகுப்புத் தேர்ச்சி.
5 இரண்டு சித்தா ஆலோசகர் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.40,000/- வயது 59க்குள், BSMS பட்டம் படித்தவர்கள்.
6) இரண்டு சிகிச்சை உதவியாளர் (ஆண்-1, பெண்-1) மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15,000/-. வயது 59க்குள் Nursing Therapist Course.
இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது. எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியுடையவர்கள் மற்றும் விருப்பமுடையவர்கள் விண்ணப்பங்களை நேரிலோ அல்லது மாவட்ட செயற்செயலாளர் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், விஸ்வநாதபுரம், மதுரை-14 (தொலைபேசி எண். 0452-2640778) என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது dphmdu@nic.in மின்னஞ்சல் மூலமாகவோ இறுதி நாளான 06.03.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பணியாளர் தேர்வானது தேசிய நலச் சங்க தேர்வு விதிகளில் தெரிவித்துள்ளபடி நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தகுதியின் அடிப்படையிலும் (இருப்பிடம், மதிப்பெண், உடல்தகுதி, முன் அனுபவம், இதர சிறப்புத் தகுதிகள்) இனச் சுழற்சி முறையிலும் நியமிக்கப்படுவர் என்பதும் தெரிவிக்கப்படுகிறது.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion