மேலும் அறிய
Job fair : தவெக நடத்திய வேலை வாய்ப்பு முகாம்.. காரைக்குடியில் ஏராளமானோர் பங்கேற்பு !
முகாமில் 500 ற்கும் மேற்பட்ட பட்டதாரி, பள்ளிப்படிப்பை இறுதி செய்த மாணவ மாணவிகள் பங்கேற்று தகுதி உள்ளவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பு பெற்றனர்.

தவெக-வின் வேலை வாய்ப்பு முகாம்
Source : whats app
தமிழகத்தில் முதன்முறையாக தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் காரைக்குடியில் நடைபெற்றது.
வேலை வாய்ப்பு முகாம்
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் பின்தங்கிய மாவட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் அதிகளவு தேர்ச்சி பெற்ற எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ளது. அதே போல் அரசுப் பள்ளியின் கல்வி தகுதியும் சிவகங்கை மாவட்டத்தில் உயர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக இருந்து வருகிறது. இதனால் வெளிநாட்டு வேலை மற்றும் வெளியூரை பொருளாதாரத்திற்கு நம்பியுள்ளனர். இந்த சூழலில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் காரைக்குடியில் நடைபெற்றுள்ளது.
காரைக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்நடைபெற்றது
அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது வழக்கமாக இருந்து வரும் நிலையில், முதன் முறையாக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கட்சியின் சார்பில் காரைக்குடியில் வேலைவாய்ப்பு முகாம்நடை பெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது
நிறுவனங்களுக்கான பணியாட்களை தேர்வு செய்தனர்.
முகாமில் 500 ற்கும் மேற்பட்ட பட்டதாரி, பள்ளிப்படிப்பை இறுதி செய்த மாணவ மாணவிகள் பங்கேற்று தகுதி உள்ளவர்கள் தங்களுக்கான வேலை வாய்ப்பு பெற்றனர்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வேலைவாய்ப்பு செய்திகளைத் (Tamil Employment News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















