மேலும் அறிய

சிவகங்கை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் ; எப்படி கலந்துகொள்வது - முழுவிபரம் இதோ

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம் - மாவட்ட ஆட்சியர்

மாபெரும்  தனியார்துறை  வேலைவாய்ப்பு  முகாம் வருகின்ற  05.10.2024 அன்று சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில்  நடைபெறவுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
 
சிவகங்கையில் வேலை வாய்ப்பு முகாம்
 
job fair 2024 Sivagangai ; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக - நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியார்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்  நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு, வருகின்ற 05.10.2024 அன்று அரசு மகளிர் கலைக் கல்லூரி, காஞ்சிரங்கால், சிவகங்கை -630 562 (பேருந்து நிறுத்தம்: காஞ்சிரங்கால்) என்ற முகவரியில் காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறவுள்ளது. 
 
சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல்
 
இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரம் (Resume), கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 09.00 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். 
 
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
 
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் https://tinyurl.com/svgcandidatereg என்ற இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம் முகாமில் பங்கேற்க உள்ள தனியார்துறை நிறுவனங்கள் https://tinyurl.com/svgempreg என்ற இணைப்பில் பதிவு செய்வது அவசியமாகும். மேலும், தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் (www.tnprivatejobs.tn.gov.in) வேலைநாடுநர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவு செய்தல் வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல்களைப் பெற  SIVAGANGAI EMPLOYMENT OFFICE என்ற Telgram channel-ல் இணைந்து பயன்பெறலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பு பெற்று பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு இரத்து செய்யப்படமாட்டாது.
 
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவைகளும் வழங்கப்படும்
 
இவ்வேலைவாய்ப்பு முகாமில் போட்டித்தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், பல்வேறு திறன் பயிற்சிகளுக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் ஆகியவைகளும் வழங்கப்படும். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் அதிக அளவில் பங்கேற்று பயன்பெறலாம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Embed widget