Campus Interview: 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிகள்.. - இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அதிரடி திட்டம் !
அடுத்த நிதியாண்டில் 55 ஆயிரம் நபர்களை பணியில் அமர்த்த இன்ஃபோசிஸ் நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று இன்ஃபோசிஸ். இந்த நிறுவனம் ஆண்டுதோறும் பல கல்லூரி மாணவர்களுக்கு பணியை வழங்கி வருகிறது. அந்தவகையில் அடுத்த நிதியாண்டில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் நாஸ்காம் தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். அதில், “இந்த நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 55 ஆயிரம் நபர்களுக்கு வேலை அளிக்க உள்ளோம். அதேபோல் அடுத்த நிதியாண்டில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை அளிக்க உள்ளோம். இதற்காக கல்லூரிகளுக்கு சென்று நேர்காணல் மூலம் ஆட்களை எடுக்க முடிவு எடுத்துள்ளோம். எப்போதும் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு நல்ல பயிற்சி அளிப்பதே எங்களுடயை நோக்கம்.
இதற்காக 6 வாரங்கள் முதல் 12 வாரங்கள் வரை புதிய பயிற்சி திட்டத்தை நாங்கள் வடிவமைத்துள்ளோம். எங்கள் நிறுவனத்தின் வருமானத்தை அடுத்த நிதியாண்டில் 20 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக புதிய திறமைகளை பணியில் எடுக்க உள்ளோம். இவை தவிர ஏற்கெனவே இருக்கும் ஊழியர்களும் தங்களுடைய திறமைகளை மேம்படுத்தும் வகையிலும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்களுக்கு தேவையான புதிய வகை தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள ஏதுவாக அந்த திட்டம் அமைந்திருக்கும். கிளவுடு கம்யூட்டிங் முதல் செயற்கை நுண்ணறிவு வரை அவர்கள் எதுவேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். இன்ஃபோசிஸ் நிறுவனம் கிளவுடு கம்யூட்டிங் பிரிவிற்கு அதிகம் செலவு செய்து வருகிறது. ஏனென்றால் அதன்மூலம் கணினி மென்பொருள் பயன்படுத்துவது வேகமாக அதிகரித்து வருகிறது” எனக் கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த காலாண்டில் தங்களுடைய வருமானத்தை 20 சதவிகிதம் வரை அதிகரித்து இருந்தது. கொரோனா தொற்று காலத்திலும் தொழில்நுட்பதுறையில் வளர்ச்சி சற்று நன்றாக அமைந்திருந்தது. இதன்காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி அதிகமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: ரூ. 60 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை. நேர்காணல் மட்டுமே.. பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்..