Indian Post : குவிந்திருக்கும் அஞ்சலக வேலைகள்.. எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் தகுதியானவர்கள்? முழு விவரம்..
Indian Post Recruitment : இந்திய அஞ்சல் துறையின் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

இந்திய அஞ்சல் துறையின் கீழ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
M.V.Mechanic(Skilled) - 4
M.V.Electrician(Skilled) - 1
Copper and Tinsmith (Skilled) - 1
Upholster(Skilled) - 1
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற தொழிற்கல்வி மையத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லையேல், எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை வழங்கப்படுகிறது.
வயதுவரம்பு:
1.7.2022 தேதியின்படி 18 வயது முதல் வயது 30-க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
டிரேட் டெஸ்ட் (Trade Test) மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் தேதி, இடம், நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.indiapost.gov.in-இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்ய வேண்டும். அதோடு தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சென்னை அலுவலக அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
மூத்த மேலாளர்,
அஞ்சல் ஊர்தி சேவை,
எண்.37, கிரீம்ஸ் சாலை,
சென்னை - 600 006
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 9.1.2023
அறிவிப்பின் முழு விவரத்தை https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP08122022_MMS_Eng.pdf- என்ற லிங்க் மூலம் காணலாம்.
இதையும் படிங்க..
தேனி: தடகள பயிற்சிக்கான வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வீரர், வீராங்கனையினர் ஆள் சேர்ப்பு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

