மேலும் அறிய

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு: 127 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள ஏராளமான பணி வாய்ப்புகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2025-26 ஆண்டில் சிறப்பு அதிகாரிகளுக்கான பிரிவில் 127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடன் தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள ஏராளமான பணி வாய்ப்புகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி, ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் தொடங்கி பெறப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IS Audit, சிவில், ஆர்க்கிடெக், எலெட்ரிக்கல், ஆட்டோமொபைல், பிரிண்ட்டிங், கருவூலம், கார்ப்ரேட் கிரெடிட், ரிஸ்க், தகவல் பாதுகாப்பு, மொபைல் ஆப்ஸ், டேட்டா சயின்டிஸ்ட், டேட்ட இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மொத்தம் 127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அவை எஸ்சி - 12, எஸ்டி - 3, ஒபிசி - 31, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் - 5, பொதுப் பிரிவு - 76 என நிரப்பப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிறப்பு நிபுணர்களுக்கான பிரிவில் நிரப்பப்படும் இப்பணியிடங்களில் 01.09.2025 தேதியின்படி, மேனேஜர் பதவிக்கு குறைந்தபட்சம் 25 முதல் அதிகபடியாக 35 வரையும், சீனியர் மேனேஜர் பதவிக்கு 30 முதல் 40 வயது வரையும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேனேஜர் மற்றும் சீனியர் மேனேஜர் பதவிக்கு எம்சிஏ, கணினி அறிவியலில் எம்.எஸ்சி அல்லது தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சைபர் பாதுகாப்பு, சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் ஆகியவற்றில் BE/ B.Tech முடித்திருக்க வேண்டும். எம்பிஏ, CFA/ CA/ PGDBA/ PGDB/ MMS உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு ஏற்ப அந்தந்த துறைகளுக்கான பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு அல்லது தகுதியை பெற்றிருக்க வேண்டும். முழுமையான கல்வித்தகுதியை அறிவிப்பில் அறிந்துகொள்ளலாம்.

மேனேஜர் பதவிக்கு 2 முதல் 3 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சீனியர் மேனேஜர் பதவிக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் தேவை.

பொதுத்துறை வங்கியில் உள்ள மேனேஜர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை என்ற விதம் சம்பளம் வழங்கப்படும். அதே போன்று, சீனியர் மேனேஜர் பதவிக்கு ரூ.85,920 முதல் ரூ.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும்.

இப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, தொழில்முறை அறிவு ஆகியவற்றில் அடிப்படையில் நடைபெறும். மொத்தம் 100 கேள்விகளுக்கு 2 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். ஆங்கிலத்தில் தேர்வு வினாத்தாள் அமையும். இத்தேர்வு கொள்குறி வகையில் அமையும். அதன்படி, கேள்விக்கான சரியான விடையை கொடுக்கப்பட்டு இருக்கும் பதில்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். இதில் நெகட்டிவ் மார்க்கிங் உள்ளது. தவறான பதிலுக்கு 1/4 அளவு மதிப்பெண் குறைக்கப்படும்.

இதில் தேர்ச்சி பெற 30% மதிப்பெண்கள் பெற வேண்டும். பொதுப்பிரிவில் 35% மதிப்பெண்கள் பெற வேண்டும். தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர அனைத்து உரிமைகளும் வங்கிக்கு உள்ளது.

விண்ணப்பிக்க தயாராக உள்ளவர்கள் https://www.iob.in/Careers என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர் ரூ.175 செலுத்த வேண்டும்.

புது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதற்கான விண்ணப்பம் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் தொடங்கிய நிலையில், வரும் அக்டோபர் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

எழுத்துத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும். நேர்காணல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அறிவிக்கப்படும். 127 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வங்கியின் மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்பட்டதர்கான அழைப்பு கடிதம் இமெயில் மூலம் அனுப்பப்படும். அதில் தேர்வு நகரம் மற்றும் தேதி விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

தலைப்பு செய்திகள்

Drone Training : 10ஆம் வகுப்பு பாஸ் போதும்! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
10ஆம் வகுப்பு பாஸ் போதும்.! ட்ரோன் இயக்க சூப்பர் சான்ஸ்- விண்ணப்பிப்பது எப்படி.? தமிழக அரசு அறிவிப்பு
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
ஒரே சார்ஜில் 683 கி.மீட்டர் மைலேஜ்.. தேர்போல கார்.. அறிமுகமாகியது Mahindra BE 6 Sporteq!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Embed widget