மேலும் அறிய

இந்திய விமானப்படை குழு 'Y' ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப்படை குழு 'Y' ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் மோகன்

இந்திய விமானப்படை குழு 'Y' ஆண் மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பித்திடலாம் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் இந்திய குடிமக்களை விமானப்படை குழு 'Y', மருத்துவ உதவியாளர் பிரிவில் சேர்ப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது, இதற்கான ஆட்சேர்ப்பு தேர்வு சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை நிலையத்தில் வரும் பிப்ரவரி மாதம் 1 முதல் 8 வரையிலான வெவ்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது.

மருத்துவ உதவியாளர் (12ஆம் வகுப்பு மட்டும்) பணிக்கு திருமணம் ஆகாதவராகவும், அங்கீகரிக்ப்பட்ட கல்வி நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலத்துடன் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும், 27/06/2002 முதல் 27/06/2006 வரையான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும், இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களைச்சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு(2நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்,

மருத்துவ உதவியாளர் 12ஆம் வகுப்பு (டிப்ளமோ/ பிஎஸ்சி மருத்துவம்) பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து 12th, Diploma/B.Sc (Pharmacy) படித்து முடித்த திருமணம் ஆகாதவர்கள் 27/06/1999 முதல் 27/06/2004 வரையான காலத்தில் பிறந்தவராகவும், திருமணமான விண்ணப்பதாரர்கள் 27/06/1999 முதல் 27/06/2002 வரையான காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும். பயிற்சியின் போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600/- வழங்கப்படும். பயிற்சியின் முடிவில், இராணுவ சேவை ஊதியம்(MSP) உட்பட குறைந்தபட்ச மொத்த ஊதியம் ரூ.26,900/- ஆகும். இப்பணிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடல் தகுதித்தேர்வு, எழுத்துத்தேர்வு (2நிலைகள்) மற்றும் மருத்துவ தேர்வு ஆகிய தேர்வுகள் வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.

உயரம் 152.5 செ.மீட்டர். இருக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பை பார்த்து, தேர்வுமுறை, தேர்வு நாளன்று எடுத்து செல்லவேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் தகவலுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தை அலுவலக வேலைநாட்களில் நேரிலோ அல்லது 04146 226417 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு இளைஞர்கள் பயனடையுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்  மோகன் தெரிவித்துள்ளார்,

தலைப்பு செய்திகள்

செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?
242 பணியிடங்கள்... பட்டதாரிகளுக்கு அருமையான வாய்ப்பு... எங்கு தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget