மேலும் அறிய

Post Office Recruitment 2024: இந்திய தபால்துறையில் 44,228 காலியிடங்கள்; - உடனே விண்ணப்பிங்க!

India Post Office GDS Recruitment 2024: தமிழ்நாட்டில் மட்டும் 3,789 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

Post Office Recruitment 2024: இந்திய அஞ்சல் துறை 44,228 காலியிடங்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள கிராமின் தாக் சேவக் (Gramin Dak Servaks) பணியிடங்களுக்கானது. தமிழ்நாட்டில் மட்டும் 3,789 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் இன்று (05.03.2024) கடைசி.

பணி விவரம்:

Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக் 

  • Branch Postmaster (BPM)/Assistant Branch
  • Postmaster (ABPM)/Dak Sevaks

மொத்த காலியிடங்கள்: 44,228 பணியிடங்கள்

தமிழ்நாடு - 3,789 பணியிடங்கள்

தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஷ்கர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட, கர்நாடகா, கேரலா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, வட கிழக்கு மாநிலங்கள், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரபிரதேஷ், உத்தரகண்ட், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள தபால் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. 

ஊதிய விவரம்:

 Branch Postmaster (BPM) - ரூ.12,000 - ரூ.29.380/-

Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks] -ரூ.10,000 - ரூ.24,470/-

கல்வித் தகுதி:

10-ம் வகுப்பு:

இந்த காலிப் பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் கம்யூட்டர் உருவாக்கும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால்  பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

தகுதி என்ன?

  • அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  • வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
  • சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு விவரம்:

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://indiapostgdsonline.gov.in/ -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. பழங்குடியின/ பட்டியலின பிரிவினர், மகளிர், Transwomen ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிப்பதற்கு அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமான https://indiapostgdsonline.gov.in/ -  சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று படி நிலைகள்,

  • ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்): முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும்.
  • கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆகியவற்றில் ஆண்கள்/ திருநம்பிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம்.
  • விண்ணப்ப கட்டணத்தை செலுத்த மாநில / மாவட்டங்களில் உள்ள எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.
  • ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் செய்தல் நிறைவு பெறும்.

முழு அறிவிப்பை https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Model_Notification.pdfஎன்ற இணைப்பைக் க்ளிக் செய்து காணலாம்.

மண்டலங்கள் முறையே உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிய https://indiapostgdsonline.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

தமிழ்நாட்டில் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை மண்டலம் வாரிய தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து 'Select Division' என்பதில் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் (மத்திய சென்னை, தென் சென்னை, வேலூர், திருச்சிராப்பள்ளி) தெரிவு செய்து விவரங்களை காணலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Telangana BRS | விரட்டியடித்த கிராம மக்கள் தெறித்து ஓடிய அதிகாரிகள்கற்களை வீசி தாக்குதல்!OPS mobile missing : ஓபிஎஸ்-க்கு இந்த நிலையா? மணிக்கணக்கில் WAITING! AIRPORT-ல் நடந்தது என்ன?S Ve Sekar VS Annamalai : ”திட்டம் தீட்டிய அண்ணாமலை!கண்டுகொள்ளாத மோடி”ஓரங்கட்டப்படும் சீனியர்கள்?Vistara Airline : கடைசியாய் ஒருமுறை..விண்ணில் பறக்கும் விஸ்தாரா!பிரியா விடை கொடுத்த பயணிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து முன்னேற உறுதியேற்றுள்ளோம்: பிரதமர் மோடி
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
Aarthi IAS: DEPUTY CM-ன் துணை செயலாளர் ! யார் இந்த ஆர்த்தி ஐ.ஏ.எஸ்.. துணை முதல்வர் கவனத்தைப் பெற்றது எப்படி?
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
சுருக்குனு ஏறும் உயர்தர கஞ்சா.. சர்வதேச லெவலுக்கு நடக்கும் கடத்தல்.. கிராம் இவ்வளவு ஆயிரமா? 
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
காஞ்சிபுரம் இளைஞர்களுக்கு வாய்ப்பு.. காத்திருக்கும் தனியார் நிறுவனங்கள்.. செய்ய வேண்டியது என்ன?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
Video: தள்ளி போ.! தொண்டரை காலால் உதைத்த பாஜக தலைவர்.! அதிர்ச்சியளிக்கும் வீடியோ.! எங்கு? என்ன நடந்தது?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
ஸ்டாலின் இதை முதல்ல செய்யுங்க... ஜி.கே. வாசனிடம் இருந்து வந்த முக்கிய அறிக்கை என்ன ?
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
பயப்படுறியா குமாரு?தவெகவின் இலவச விருந்தகம் அகற்றம்; மதுரையில் வெடித்த சர்ச்சை!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
விஜய்க்காக வாயை விட்ட கார்த்தி சிதம்பரம்; அதிரடி முடிவை எடுத்த சீமான் - கண்டிஷனை மட்டும் பாருங்க!
Embed widget