India Post GDS Recruitment: சென்னையில் வேலை; 2,994 அஞ்சல் ஊழியர் பணியிடங்கள்; தகுதித் தேர்வுகள் இல்லை - முழு விவரம்
India Post GDS Recruitment: தமிழ்நாடு மண்டலத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையின் தமிழ்நாடு மண்டலத்தில் 2,994 கிராமிய அஞ்சல் ஊழியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க வரும் 23-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நாள் வரை காத்திருக்காமல் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்று அஞ்சல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர மண்டலத்தின் கீழ், 607 பணியிடங்களை நிரப்புவதற்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள், எப்படி விண்ணப்பிப்பது என்று காணலாம்.
10-ம் வகுப்பு:
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மூலம் உருவாக்கப்படும் மெரிட் லிஸ்ட் வைத்து தேர்வு செய்யப்படுபவர்கள். பின்னர், அந்த மெரிட் லிஸ்டின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். அதனால் பத்தாம் வகுப்பு தேர்வில் 460 அல்லது 400-க்கு மேல் எடுத்திருந்தால், நிச்சயமாக விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பணி விவரம்:
Gramin Dak Servaks -கிராமின் தாக் சேவக்
இதன் மூலம் சென்னையில் கிளை அஞ்சல் அதிகாரி, துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் ஆகிய பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்த காலியிடங்கள்: 2,944 பணியிடங்கள்
சென்னையில் மட்டும் 607 பணியிடங்கள்
தகுதிகள்:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்தந்த மண்டலங்களுக்கு விண்ணபிப்பவர்கள் மாநிலங்களின் உள்ளூர் மொழி பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம், சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
சென்னையில் வசிப்பவராக இருந்தால் நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு விவரம்:
விண்ணப்பத்தாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஊதிய விவரம்:
கிளை அஞ்சல் அதிகாரி பணிக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.29,380 வரையிலும், துணை கிளை அஞ்சல் அதிகாரி, கிராமிய அஞ்சல் ஊழியர் பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.24,470 வரையும் ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விகிதங்களின்படி தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.indianpost.gov.in / https://indiapostgdsonline.gov.in -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்கள், மகளிர், Transwomen ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
தமிழ்நாடு மண்டலத்தில் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கை, கல்வித் தகுதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் இதர தகுதி, நிபந்தனைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு..https://indiapostgdsonline.cept.gov.in/Notifications/Final_Post_Consolidation.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.08.2023