மேலும் அறிய

Income Tax Recruitment: வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை; 291பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

Income Tax Recruitment: வருமான வரித்துறை அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.

வருமான வரித்துறை மும்பை பிரிவு, இன்ஸ்பெக்டர், எம்.டி.எஸ். மற்றும் பிற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

 விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜனவரி 19, 2024 ஆகும். விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 291 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

பணி விவரம்

இன்ஸ்பெக்டர் - 14

வரி உதவியாளர் - 119 

ஸ்டெனோக்ராபர் க்ரேட் 2 - 18 

பன்முக உதவியாளர் - 137 

கேன்டீன் உதவியாளர் - 03

மொத்த பணியிடங்கள் - 291 

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் incometaxmumbai.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். 

எந்தெந்த விளையாட்டு பிரிவுகளில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்களை அறிய https://mumbai-itax-sportsrecr23.com/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

கல்வித் தகுதி

  • இன்ஸ்பெக்டர், டேக்ஸ் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கேண்டீன் உதவியாளர், பன்முக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-வது அல்லது 12-வது படித்திருக்க வேண்டும். 
  • ஸ்டேனோக்ராபர் பணிக்கு 12-வது தேர்ச்சியுடன் அதற்கு சம்பந்தப்பட்ட சான்றிதழ் படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விளையாட்டுத் துறையில் மாநில / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

வயது வரம்பு

மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி - 19.02.2024

வேலைவாய்ப்பு குறித்த மேலதிக விவரங்களுக்கு https://mumbai-itax-sportsrecr23.com/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

IAF Recruitment 

இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு, அதாவது போர் அல்லாத பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிப்ரவரி,6-ம் தேதி கடைசி நாளாகும். அதோடு, பணியிட தேவையை பொறுத்து பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

அக்னிவீர்வாயு பணியாளர்கள்

அக்னிபத் திட்டம் 

அக்னி பத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 

அக்னிபாத் திட்டம் மூலம், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான 45,000 இளைஞர்கள், நான்காண்டு பதவி காலத்துடன் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள். இந்த பதவி காலத்தில், அவர்களுக்கு 30,000 முதல் 40,000 ரூபாய் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

கல்வித் தகுதி: 

  • இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் பள்ளிக்கல்வி முடித்திருக்க வேண்டும். 
  • வேதியியல், இயற்பியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  • +2 வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
  •  மூன்று ஆண்டுகள் பொறியியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் ஒக்கேசனல் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 
  • ஆங்கில பாடத்தில் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 21- வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் 
https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf - தெரிந்துகொள்ளலாம். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சியின்போது உதவித் தொகையாக மாதம் ரூ.14,600 வழங்கப்படும். அதன்பிறகு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Income Tax Recruitment: வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை; 291பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி

4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும்.  

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு www.airmenselection.cdac.in  -என்ற இணையதளத்தில் அணுகலாம். வேலைவாய்ப்பு அறிவிப்பில் கொடுத்துள்ள ஆவணங்கள் உடன் தகுதியுடைவா்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 17-தேதி உடற்தகுதித் தேர்வு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

விண்ணப்ப கட்டணம்

இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.550 கட்டணமாக செலுத்த வேண்டும்.

Physical Fitness Test (PFT)

Income Tax Recruitment: வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை; 291பணியிடங்கள் - எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.02.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain Alert: அடடே..! தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை கொட்டும்? - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
UP Fire Accident: கதறி துடிக்கும் பெற்றோர், 10 கைக்குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு - உ.பி., மருத்துவமனையில் தீ விபத்து
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
Rasipalan Today Nov 16: பிறந்தது கார்த்திகை மாதம்.! தீபம் போல ஒளிரும் ராசிகள் எவை? இன்றைய ராசிபலன்.!
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Embed widget