Jobs: 200 பணியிடங்கள்; தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
IGNOU JAT Recruitment இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (IGNOU) உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் அல்லாத பணிகள் இந்த வேலைவாய்ப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு என்னென்ன தகுதிகள் என்பதை பற்றி கீழே காணலாம்.
பணி விவரம்:
இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் (Junior Assistant-cum-Typist (JAT) for IGNOU)
மொத்த பணியிடங்கள் - 200
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10+12 என்ற முறையில் பள்ளிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கம்யூட்டரில் ஆங்கிலத்தில் 40 W.P.M. ஸ்பீடு, ஹிந்தியில் 35 W.P.M. ஸ்பீட்டில் டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும்.
பணியிடம்:
இந்தப் பணிகளுக்கு இந்தியாவில் உள்ள மையங்களில் தேர்வு செய்யப்படுவர்கள் பணியமர்த்தப்படுவர்.
வயது வரம்பு:
இதற்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாவும், அதிகபட்சமாக 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதிய விவரம்:
இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
என்னென்ன கேட்கப்படும்?
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். பழங்குடியின / பட்டியிலின பிரிவினர், மகளிர் ஆகியோருக்கு ரூ.600 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
ஆன்லைன் முறையில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவைகள் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்ணப்பிக்க https://recruitment.nta.nic.in/WebInfoIgnou/Page/Page?PageId=1&LangId=P - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான தகவல்களை பதிவு செய்து பூர்த்தி செய்யவும்.
ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.04.2023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள கடைசி நாள்: 22.04.2023
இது தொடர்பான கூடுதல் தகவலுக்கு https://cms.ecounselling.nic.in/CMSAdmin/Handler/FileHandler.ashx?B=128&A=176&F=7&L=P - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
சந்தேகங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு
இ-மெயில் : ignou.jat@nta.ac.in
தொலைபேசி எண் - 011-69227700, 011-40759000
கவனிக்க..
விண்ணப்ப கட்டணம் தொடர்பாக கீழ் வரும் தகவல்களை இ-மெயில் மூலம் அனுப்ப வேண்டும்.
- வங்கியின் பெயர்
- விண்ணப்ப கட்டண பரிவர்த்தனை செய்த நேரம் / தேதி
- பரிவர்த்தனை எண்
- வங்கி ஃரெபரன்ஸ் எண்
- பணபரிவர்த்தனையின் ஸ்கிரீன்சார்ட்
மேலும் வாசிக்க..
RahulGandhi: வயநாடு தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல்..? தேர்தல் ஆணையம் விரைவில் முக்கிய முடிவு
விழா மேடையில் முதலமைச்சர் வைத்த 3 கோரிக்கைகள்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சொன்னது என்ன?