மேலும் அறிய

HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

தகுதியுள்ள நபர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அறங்காவலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்து சமய அறநிலையத்துறை (HR&CE) என்பது தமிழ்நாடு அரசின் ஒரு துறையாகும். இதன் முக்கிய பணி இந்து கோயில்கள் மற்றும் அவற்றின் சொத்துக்களை நிர்வகித்து, பாதுகாத்து, கோயில் நிர்வாகம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்வதாகும். இதன் முக்கிய பணிகளாக இந்து கோயில்களின் நிர்வாகத்தை மேற்பார்வை செய்தல்,கோயில் சொத்துகள் மற்றும் வருவாயைப் பாதுகாத்தல், கோயில் திருவிழாக்கள் மற்றும் வழிபாடுகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்தல்,அறக்கட்டளைகள் மற்றும் நன்கொடைகளை நிர்வகித்தல்,கோயில் ஊழியர்கள் தொடர்பான நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவையாகும்.

HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சுமார் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சொந்தமாக சுமார் 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. கோயில்களின் பராமரிப்பு, கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. கோயில்களின் நிர்வாகப் பணிகளை கவனிக்க அறங்காவலர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். கடந்த ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட சில அறங்காவலர்கள் பதவி விலகியுள்ளதால், பல கோயில்களுக்கு புதிதாக அறங்காவலர்களை நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த மாதம் 757 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 49(1)-ன் கீழ் பட்டியலில் சேராத 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாராத அறங்காவலர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியுள்ள நபர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அறங்காவலர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அறங்காவலர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, கோயில்களின் விவரங்கள், தகுதிகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்தோ, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

HR&CE: 8,193 கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம் - விண்ணப்பிக்க அரிய வாய்ப்பு!

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலமாகவோ சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.விண்ணப்பங்களை 20.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே 1,012 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாராத அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கும், 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Embed widget