TNHRCE Recruitment:ரூ.62,000 ஊதியம்! இந்து அறநிலையத்துறையில் வேலை - முழு விவரம்!
TNHRCE Recruitment: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு விவரம்.
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
- ஓட்டுநர்
- அலுவலக உதவியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் வைத்திருக்க வேண்டும். நல்ல உடல் தகுதியுடன் இருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/-
அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க ஆவணங்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் சுய விலாசமிட்ட ரூ.25/- க்கான தபால் தலை ஒட்டிய உறை உன்றுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை
35/1A, மேலரத வீதி,
தூத்துக்குடி- 628 002
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, தெரிவு செய்யப்படும் முறை உள்ளிட்ட மேலதிக தகவலுக்கு https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/184/document_1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.03.2024 மாலை 5 மணி வரை
9,000 பணியிடங்கள்; ரயில்வே துறையில் வேலை - நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. இதற்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், புதிதாக 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் (CEN No.02/2024) வெளியிடப்பட்டுள்ள விவரங்களை காணலாம்.
பணி விவரம்
Technician Gr I Signal
Technician Gr III
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- கல்வித் தகுதி தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் அப்டேட்களை காணலாம்.
- விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
ஊதிய விவரம்
Technician Grade – I (Signal) – Pay Level 5 ரூ.29200/-
Technician Grade – III – Pay Level 2 ரூ.19900/-
தெரிவு செய்யப்படும் முறை
ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் கணினி தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.04.2024
இணையதள விவரம்
இது தொடர்பாக எழும் சந்தேகங்கள் குறித்து அறிய தொடர்ப்பு கொள்ள --இ-மெயில்: rrbhelp@csc.gov.in
தொடர்பு : 9592001188 (அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.)
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய https://www.rrbchennai.gov.in/downloads/important_notices_rrb_tentative_calendar1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
மேலும் வாசிக்க..