மேலும் அறிய

நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!

சென்னை: நடந்து முடிந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த வெளியான நிலையில், அதில் பல்வேறு குளறுபடிகள் நீடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சென்னை: நடந்து முடிந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அதில் பல்வேறு குளறுபடிகள் நீடிப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்தத் தேர்விலேயே 4,000 காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல், 2,708 இடங்களை மட்டுமே நிரப்பத் துடிக்கும் உயர் கல்வித்துறையின் போக்கிற்குத் தேர்வர்கள் கடும் கண்டனமும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.

10 ஆண்டுகாலக் காத்திருப்பும் குளறுபடி புகார்களும்

தமிழகத்தில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்ப்புப் பணிகள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காரணங்களால் இழுபறியாக நீடித்து வந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, 42,064 பேர் எழுதிய இத்தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

ஆனால், வெளியான தேர்வு முடிவுகளில் மதிப்பெண் குளறுபடிகள், பிறந்த தேதிகளில் குழப்பம், கட்டுரைத்தாள் (விடைத்தாள்) திருத்தத்தில் பாரபட்சம் எனப் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகத் தேர்வர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல ஆண்டுகளாக வாழ்வைத் தொலைத்து, கடும் மன உளைச்சலோடு படித்து வந்த தங்களுக்கு இந்த முடிவுகள் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் அமைச்சரின் பேட்டி

கடந்த ஜனவரி 28, 2026 அன்று தமிழக அரசு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த கணக்கின்படி, மாநிலத்தில் மொத்தம் 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தச் சூழலில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர், நீதிமன்றம் அவ்வாறு உத்தரவிடவில்லை என்றும், முதலில் அறிவிக்கப்பட்ட 2,708 பணியிடங்களை மட்டுமே நிரப்புவோம் என்றும் கூறியுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு, தங்களை வஞ்சிக்கும் செயல் என்றும் உயர் கல்வித்துறையைச் சீரழிக்கும் போக்கு என்றும் தேர்வர்கள் சாடுகின்றனர்.

உயர் நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு கூறுவது என்ன?

உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பின் பக்கம் 62, 104 மற்றும் 105 ஆகியவற்றில் மிகத் தெளிவாகவும், உறுதியாகவும் சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:

ஒரே தேர்வில் 4,000 இடங்கள்: முதலில் அறிவிக்கப்பட்ட 2,708 இடங்களுடன், விடுபட்ட 1,292 நடப்பு காலிப் பணியிடங்களையும் சேர்த்து மொத்தம் 4,000 இடங்களை தற்போதைய தேர்வு மூலமே (16.10.2025 அறிவிப்பு) உடனடியாக நிரப்ப வேண்டும்.

நிதி ஆதாரம் உள்ளது: 4,000 பேராசிரியர்களைப் பணியில் அமர்த்துவதற்கான நிதி ஆதாரம் அரசிடம் இருப்பதை நீதிமன்றத்தில் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, 42,064 விண்ணப்பதாரர்களில் இருந்தே இவர்களைத் திறந்தவெளிப் போட்டி மூலம் தேர்வு செய்ய வேண்டும்.

அரசின் வாதம் நிராகரிப்பு: "மீதமுள்ள 1,292 இடங்களை அடுத்த தேர்வுச் சுழற்சியில் (Next cycle) நிரப்புகிறோம்" என்ற அரசின் வாதத்தை நீதியரசர்கள் முற்றிலுமாக நிராகரித்தனர்.

அடுத்த 6 மாத காலக்கெடு: இந்த 4,000 இடங்கள் போக, மீதமுள்ள 3,198 காலிப் பணியிடங்களுக்கு இன்னும் 6 மாதங்களுக்குள் புதிய அறிவிப்பு வெளியிட்டு அதையும் நிரப்ப வேண்டும்.

"பூனை கண் மூடிக்கொண்டால் இருள் என்று நினைப்பது போல, நீதிமன்றத் தீர்ப்பைத் தங்களுக்குச் சாதகமாகத் திருப்பி 2,708 இடங்களைத்தான் நீதிமன்றம் சொன்னது எனக் கூறி அரசு ஏமாற்றுவது சட்டப்படியும், நியாயப்படியும் தவறானது." – பாதிக்கப்பட்ட தேர்வர்கள்

காலிப் பணியிடங்களை இணைக்க வழிவகுக்கும் முந்தைய அரசாணைகள்

தேர்வு நடைமுறைகள் முடியும் முன்பாக, கூடுதல் காலிப் பணியிடங்களை அதே தேர்வில் இணைப்பதற்குத் தமிழக அரசிடம் ஏற்கனவே பல்வேறு சட்டப்பூர்வ அரசாணைகளும், முன் உதாரணங்களும் உள்ளன என்பதைத் தேர்வர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்:

G.O.(Ms).No.150 (பள்ளிக் கல்வித் துறை - 2007): தகுதிப் பட்டியல் தயாரித்த பிறகு கலந்தாய்வு நடக்கும் வரை ஏற்படும் புதிய காலிப் பணியிடங்களையும் சேர்த்து நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு (TRB) இது தற்காலிக அனுமதி அளித்தது.

G.O. (Ms) No. 65 (P&AR துறை - 2010): தேர்வு அறிவிப்பு வெளியான பிறகு, இறுதிப் பட்டியல் வெளியாவதற்கு முன் உருவாகும் கூடுதல் இடங்களை (Subsequent Vacancies) அதே அறிவிப்பில் சேர்க்க TNPSC உட்பட அனைத்து வாரியங்களுக்கும் இது முழு அதிகாரம் அளிக்கிறது.

G.O. (Ms) No. 139 (பள்ளிக் கல்வித் துறை - 2014): TET மற்றும் முதுகலை ஆசிரியர் நியமனங்களில் கூடுதல் இடங்களைச் சேர்ப்பதை முறைப்படுத்தியது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்டம், 2016 (பிரிவு 27): தகுதிப் பட்டியல் தயாரிக்கும் போது, அவசரக் காலிப் பணியிடக் கோரிக்கைகள் வந்தால் அரசிடம் ஒப்புதல் பெற்று கூடுதல் இடங்களை இணைக்க ஆள்சேர்ப்பு வாரியங்களுக்குச் சட்டப்பூர்வ வழிவகை செய்கிறது.

இந்த அரசாணைகளின் தொடர்ச்சியாக உருவான G.O. 231-ன் படிதான், 2,708 இடங்களுடன் 1,292 நடப்பு இடங்களை இணைத்து 4,000 இடங்களாக நிரப்ப அரசு முன்பு கொள்கை முடிவு எடுத்தது. இதைக் குறிப்பிட்டே உயர் நீதிமன்றமும் இந்தத் தேர்விலேயே 4,000 இடங்களையும் நிரப்ப ஆணையிட்டுள்ளது.

மாணவர்களின் எதிர்காலமும், தேர்வர்களின் கோரிக்கையும்

பல ஆண்டுகளாகக் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததால், அரசு கலைக் கல்லூரிகளில் பயிலும் லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி, உயர் கல்வித்துறை சீரழிந்து வருகிறது.

வயது கடந்து, குடும்பத்தையும் கவனிக்காமல் பல ஆண்டுகளாக இத்தேர்விற்காகத் தங்களை அர்ப்பணித்துப் படித்த தேர்வர்களின் உழைப்பை மதித்து, நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காமல், நடப்புத் தேர்விலேயே விடுபட்ட இடங்களையும் சேர்த்து 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் முழுமையாக நிரப்பத் தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும் எனத் தேர்வு எழுதித் தவிக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க 2 நாளே இருக்கு
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு! மாதம் ரூ.63,000 வரை சம்பளம்: எங்கு தெரியுங்களா? 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 வேலைவாய்ப்புகள்! உடனே விண்ணப்பியுங்கள்! தகுதிகள் என்னென்ன ?
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
10-வது படித்திருந்தா போதும்! புதுச்சேரி அஞ்சல் வங்கியின் அசத்தல் வேலைவாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget