Job Alert : வேலை வேண்டுமா? மகளிருக்கான அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Job Alter : மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரம்.
மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவு வட்டார இயக்க மேலாண்மை பிரிவு ஆகியவற்றில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த முறை நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதற்கு மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
உசிலம்பட்டி - வட்டார இயக்க மேலாளர்
சேடப்பட்டி - வட்டார ஒருங்கிணைப்பாளர்
தே.கல்லுப்பட்டி- வட்டார ஒருங்கிணைப்பாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
வட்டார இயக்க மேலாளர்கள் -
- ஏதேனும் ஒரு இலாங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 5 மாதம்
- MS Officc சான்று பெற்றிருக்க வேளர்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும். 2. அதிக பட்ச வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
- மதுரை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேலர்டும். இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆனர்டு முன் அனுபவம். 5. சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்:
- ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் 3 மாதம்
- MS Office சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
- அதிக பட்ச வயது 35-க்குள் இருக்க வேண்டும்.
- சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முள் அனுபவம்,
- சுய உதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
கவனிக்க..
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு விபரம் பதிவஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண் விண்ணப்பதாரர்கள் தங்களுடையவட்டாரத்தினை சரியாக குறிப்பிட வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எப்படி விண்ணப்பிப்பது?
https://madurai.nic.in/-என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து அஞ்சல் மூலம் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அலுவலகத்திற்கு சென்றும் பெற்றுக்கொள்ளலாம்.
அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
புதுநத்தம் ரோடு, ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில்,
மதுரை.
இந்தப் பணிகளுக்கு வழங்கப்படும் ஊதியம், விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/01/2023012578.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2023 மாலை 5 மணி வரை.
இதையும் படிங்க..
Job Alert : மாதம் ரூ.25 ஆயிரம் வரை ஊதியம் ; நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி; விவரம் இதோ!