மேலும் அறிய

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: 5 நாள் பயிற்சி, அரசு சான்றிதழ்! வேலை, தொழில் வாய்ப்புகள்!

தங்க நகை மதிப்பீட்டாளர்‌ பயிற்சி ஆகஸ்ட் 15 முதல் அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவன வளாகத்தில்‌ நடைபெற உள்ளது‌.

தொழில்முனைவோர்‌ ஐந்து நாட்கள்‌ "தங்க நகை மதிப்பீட்டாளர்‌ பயிற்சி" பெறலாம் என்று தமிழக அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌ அழைப்பு விடுத்துள்ளது.

நாளுக்கு நாள் தங்க நகையின் விலை சரசரவென ஏறி வரும் நிலையில், தங்க நகை மதிப்பீடு சார் பணிகள் முக்கியம் வாய்ந்தவையாக மாறி உள்ளன.

இந்த நிலையில் சென்னையில்‌ "தங்க நகை மதிப்பீட்டாளர்‌ பயிற்சி" 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஐந்து நாட்கள்‌ நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, அரசின்‌ தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவன வளாகத்தில்‌ நடைபெற உள்ளது‌.

பயிற்சியின்‌ உள்ளடக்கம்‌

‌*  தங்கம்‌, வெள்ளி, போன்ற உலோகங்களின்‌ தரம்‌ அறிதல்‌.

* கேரட்‌ மதிப்பீடுகள்‌.

*  ஆசிட்‌ சோதனை.

* எடை அளவு இணைப்பான்‌.

* விலை நிர்ணயிக்கும்‌ முறை (Board Rate).

* ஹால்‌ மார்க்‌ மற்றும்‌ போலியான நகைகளை அடையாளம்‌ காணும்‌ நடைமுறைகள்‌

போன்றவை கற்றுத் தரப்படும்‌.

 

* மேலும்‌ ஆபரணக்‌ கடனுக்கான கணக்கீட்டு முறைகள்‌.

* தங்க அணிகலன்‌ வகைகள்‌ பற்றிய பயிற்சியும்‌ அளிக்கப்படும்‌.

வேலைவாய்ப்பு வழிகாட்டல்‌

* பொதுத்துறை, கூட்டுறவு மற்றும்‌ தனியார்‌ வங்கிகளில்‌ நகை மதிப்பீட்டாளர்‌ பணிக்கான வாய்ப்புகள்‌,

* அவற்றை பெறும்‌ நடைமுறைகள்‌.

* அரசுத்‌ திட்ட உதவிகள்‌ மற்றும்‌ மானியங்கள்‌ குறித்த ஆலோசனைகளும்‌ இந்த பயிற்சியில்‌ வழங்கப்படும்‌.

என்ன தகுதி?

இந்த பயிற்சியில்‌ பங்கேற்க விரும்பும்‌ ஆண்‌, பெண்‌ மற்றும்‌ திருநங்கைகள்‌ 18 வயதிற்கு மேல்‌ இருக்க வேண்டும். மேலும்‌ குறைந்தபட்சம்‌ 10-ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. தங்கும்‌ வசதி குறைந்த கட்டணத்தில்‌ வழங்கப்படும்‌. பயிற்சிக்கு முன்பதிவு அவசியம்‌.

பதிவு மற்றும்‌ தொடர்பு விவரங்கள்‌

விவரங்களுக்கு மற்றும்‌ முன்பதிவிற்கு https://www.editn.in/  அல்லது 9543773337 / 9360221280 என்ற எண்களில்‌ அலுவலக நேரத்தில்‌ (திங்கள்‌ முதல்‌ வெள்ளி வரை காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை) தொடர்புகொள்ளலாம்‌.

முகவரி:

தமிழ்நாடு தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம்‌, சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல்‌, சென்னை – 600 032.

முன்பதிவு அவசியம்‌

பயிற்சியின்‌ முடிவில்‌ அரசு சான்றிதழ்‌ வழங்கப்படும்‌ என்று தமிழ்நாடு தொழில்‌ முனைவோர்‌ மேம்பாடு மற்றும்‌ புத்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.editn.in/

 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
படிக்கும்போதே உதவித்தொகை... முடித்ததும் ₹22,000 சம்பளத்தில் வேலை! தாட்கோவின் சூப்பர் திட்டம்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்: இலவச பேருந்து, மருத்துவ வசதிகளுடன் கலெக்டர் தலைமையில் அதிரடி ஏற்பாடுகள்!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
8-ஆம் வகுப்பு முதல் பி.இ வரை: மயிலாடுதுறையில் ஜூலை 10 அன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்! - மிஸ் பண்ணிடாதீங்க!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!
திண்டுக்கல் காந்தி கிராமத்தில் ரூ.75,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயரந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
E20 பெட்ரோலால் குறையும் மைலேஜ்; வாகனங்களில் ஏற்படும் பாதிப்புகள்- ARAI வெளியிட்ட ஷாக் தகவல்!
EPS ADMK : தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- இபிஎஸ்
தவெகவில் மரியாதையே இருக்காது... வெறும் பதவி சுகத்திற்காக போயிருக்காங்க- விளாசிய இபிஎஸ்
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க- அன்புமணி
Seeman Slams Keerthana : ‘இதெல்லாம் என்ன? அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு..!
‘அதிமேதாவித்தனம், அத்துமீறல்’ அமைச்சர் கீர்த்தனாவிற்கு சீமான் கடும் எதிர்ப்பு!
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
Embed widget