Job Alert: பல் மருத்துவரா நீங்கள்? ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி - முழு விவரம்
Job Alert: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவர் பணியிட வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை இங்கே காணலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப நிலையத்திற்கு தொகுப்பூதிய அடிப்படையில் பல் மருத்துவர் பணியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
பல் மருத்துவர்
கல்வித் தகுதி
பல் மருத்துவர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் BDS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.34,000/- வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி ஆவணங்களுடன் நேரிலொ / விரைவு தபால் / மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி -
District Health Society,
O/o Deputy Director of Health Services,
Collector Office Backside,
Krishnagiri-631115
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.12.2023
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s37eacb532570ff6858afd2723755ff790/uploads/2023/12/2023120866.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மத்திய அரசின் நவோதயா வித்யாலயா சமிதி பள்ளியில் (Navodaya Vidyalaya Samiti School) காலியாக உள்ள பணியிடத்திற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
துணை ஆணையர் ( Deputy Commisioner - Finance)
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவோதய வித்யாலயா சமிதி பள்ளியில் Deputation முறையில் பணிசெய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுகிறது. நிதி துறையில் துணை ஆணையர் பணியிடம் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
மத்திய / மாநில / Statuary / Autonomous நிறுவனங்களில் Pay Level -12 ல் ஊதியம் வாங்குபவர்கள், 5 ஆண்டுகள் 11- லெவல் ஊதியம் வாங்குபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
15,டிசம்பர், 2023-ன் படி, விண்ணப்பத்தாரர்கள் 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்
இது மூன்றாண்டு கால பணியாகும். (தேவையெனில்)
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.78,800- ரூ. 2,09,200 வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களுடன் அஞ்சல் அனுப்ப வேண்டும். இ-மெயில் மூலமாகவும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
Deputy Commissioner Admin,
Navodaya Vidyalaya Samiti,
B-15,Institutional Area, Sector-62,
Noida
Gautam Budh Nagar (U.P.) - 201309
இ-மெயில் முகவரி - applications.nvs@gmail.com
இந்த வேலைவாய்ப்பு குறித்து முழு விவரங்களுக்கு https://navodaya.gov.in/nvs/en/Recruitment/Notification-Vacancies/# - என்ற இணைப்பி க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
SSC வேலைவாய்ப்பு
SSC என்று அழைக்கப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ] Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, and Rifleman (GD) in Assam Rifles ஆகிய பணியிடங்களுக்கான 26,146 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பணி விவரம்
- கான்ஸ்டபிள் ( Constable (General Duty)) -
- எல்லை பாதுகாப்புப் படை ( Border Security Force (BSF)) -6174
- மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (Central Industrial Security Force (CISF)) - 11025
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை (Central Reserve Police Force (CRPF)) -3337
- இந்தோ - தீபத் காவல் படை (Indo Tibetan Border Police (ITBP))-3189
- சாஸ்த்ரா சீமா பால் (Sashastra Seema Bal (SSB)) -635
- Secretariat Security Force (SSF) -296
- Rifleman (General Duty)
- Assam Rifles (AR) - 1490
மொத்த பணியிடங்கள் - 26146
கல்வித் தகுதி:
இதற்கு விண்ணப்பிக்க 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்
01.01.2024-ன் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 23 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணபிப்பது?
https://ssc.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணமா ரூ.100 செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியில் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். BHIM UPI, Net Banking, by using Visa, Mastercard, Maestro, RuPay Credit or Debit cards. ஆகியவற்றின் மூலம் கட்டணம் செலுத்தலாம்.
விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய 04.01.2024 முதல் 06.01.2024 (23:00) வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்கள்:
பெங்களூரு, மைசூர்., திருவனந்தபுரம், கோழிக்கோடு, டெல்லி, திருப்பதி, நெல்லூர், புதுச்சேரி, சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வாராங்கல், மதுரை, திருச்சி, விசாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு மையங்களாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் உடற்தகுதி தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பாடத்திட்டம்
உடற்தகுதி தேர்வு
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Notices | Staff Selection Commission | GoI (ssc.nic.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும். - SSC Constable Post’, Apply என்பதை கிளிக் செய்யவும்
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்
- புதிதாக உள்ள விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுக்கு சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2023