மேலும் அறிய

சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

Postal Life Insurance recruitment: சென்னை அண்ணாசாலையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் அஞ்சலக / ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களை தேர்வு செய்ய உள்ளது.

Post Office: முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவுலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு 

சென்னை அண்ணாசாலையில் உள்ள முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் தற்போது அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை மற்றும் ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களை பணிநியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கான நேர்முக தேர்வு வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

நடைபெறும் நேரம் காலை : 11.00 மணி,

நடைபெறும் இடம்: முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம், அண்ணாசாலை, சென்னை.  கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் உள்ளவர்கள் இந்த நேர்முக தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  இளைஞர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், மகிளா மண்டல ஊழியர்கள், காப்பீட்டு பத்திரங்கள் விற்பனையில் முன் அனுபவம் உள்ளவர்கள், படித்து முடித்த விட்டு வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், சுயதொழில் / சுய வேலை  செய்பவர்கள் உள்ளிட்டோர் இந்த நேர்முக தேர்விற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். 18 வயது முதல் 50 வயது வரை உள்ள ஆர்வமுள்ள நபர்கள் இந்த நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.

சென்னை முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை!

நேர்முக தேர்விற்கு என்ன எடுத்து செல்ல வேண்டும்? 

நேர்முக தேர்வை எழுத வருவோர் தங்களை பற்றின விவரங்கள்  - பெயர், முகவரி, தொலைபேசி எண் பற்றின குறிப்பு கொண்டு வர வேண்டும். அதனோடு கல்வி சான்றிதழ், வயது சான்றிதழ், அனுபவ சான்றிதழ் (முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும்), 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றை நேர்முக தேர்வின் போது கொண்டு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ரூ. 5,000 பாதுகாப்பு வைப்புத் தொகையை  கிசான் விகாஸ் பத்திர வடிவில் அல்லது  தேசிய சேமிப்பு பத்திரம் மூலம் செலுத்த வேண்டும் என முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில் விவரிக்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்க தகுதி இல்லாதவர்கள்:

வேறு காப்பீட்டு நிறுவனங்களில் தற்போது காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்துவரும் முகவர்கள் இந்த அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களாக விண்ணப்பிக்க முடியாது. 

கூடுதல் வாய்ப்பு யாருக்கு?

மேலும் கணினி பற்றின அறிவு, முன் அனுபவம் மற்றும் உள்ளூர் பற்றின போதுமான அறிவு  உள்ளவர்கள் விண்ணப்பித்தால்  கூடுதல் தகுதிகளாக கருதப்பட்டு அவர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும். 

தகுதியும், ஆர்வமும் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்யும் நேரடி முகவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.  

தலைப்பு செய்திகள்

SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
IBPS வங்கி கிளார்க்: 11,403 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க ஆகஸ்ட் 21 கடைசி நாள்!
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget