மேலும் அறிய

Chennai Jobs : மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றவரா? நகர்ப்புற சுகாதார மையங்களில் வேலைவாய்ப்பு; விவரம் இதோ!

Chennai Jobs: சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு இது.

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் (National Urban Health Mission) கீழ் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கம் (Chennai city Urban Health Mission) சார்பில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் மருத்துவ மையங்களில் பணிபுரிய காலியாக உள்ள மருத்துவ பணியாளர்களுக்கான ஒப்பந்தம் அடிப்படையிலான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்பின் மூலம் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது ஒப்பந்தம் அடிப்படையான வேலை மட்டுமே என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

மருத்துவ அலுவலர் (Medical Officer) - 19
ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse) - 39

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி:

Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பில் (M.B.B.S.)தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 

Staff Nurse பணிக்கு 10+2 என்பத அடிப்படையில் உயர்க்கல்வி படித்திருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்ஸிங் படித்திருக்க வேண்டும்.  மூன்று ஆண்டு காலம் General Nursing மற்றும்  Midwife துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகள் நர்ஸிங் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

இந்த பணிகளுக்கான ஊதிய விவரம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஏதும் குறிப்பிடப்படவில்லை. 

எப்படி விண்ணப்பிப்பது? 

சுய விவர குறிப்புடன், தேவையான அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். 

கவனிக்க:

இந்தப் பணி 11 மாத கால ஒப்பந்தம் அடிப்படையிலானது. நிரந்தர பணி வாய்ப்பு அல்ல. 

பணி தேர்ந்தெடுக்கப்படுவோர் சென்னை நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டும். 

தேர்தெடுக்கப்படுவர்கள் சென்னையில் செயல்படும் சுகாதார மையங்களில் பணியமர்த்தப்படுவர்.

ஒரு மாதத்திற்கு (one month notice) முன்பே அறிவிப்புடன் ஒப்பந்தம் முடித்துக்கொள்ளப்படும். 

எக்காரணமும் இன்றி ஒப்பந்தந்தை முடித்துக்கொள்ள சென்னை பெருநகர மாநகராட்சிக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்: 

சுய விவர குறிப்பு
கல்விச் சான்றிதழ்கள்
அனுபவ சான்றிதழ்
Consent Letter

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.11.2022 மாலை 5 மணி வரை 

தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நேர்காணல் குறித்து தகவல் அளிக்கப்படும். நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்களுக்கு அதற்கான போக்குவரத்து செலவு அதாவது Traveling Allowance மற்றும் Dearness Allowance வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://chennaicorporation.gov.in/gcc/pdf/Advertisment%20and%20Application%20Form%20for%20MO.pdf

முகவரி :

The Member Secretary,
Chennai City Urban Health Mission, 
Public Health Department, Rippon Buildings, 
Chennai - 600 003

கூடுதல் விவரங்களுக்கு 044 - 25619330 என்ற எண்ணில் வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதள முகவரியிலும் தகவல்களை பெறலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget