இன்ஜினியரிங் பட்டதாரிகளா? ஆயுத தொழிற்சாலையில் உதவித் தொகையுடன் வாய்ப்பு!
திருச்சியில் கடந்த 1966 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கால தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி செயல்பட்டுவருகிறது. நாட்டில் இயங்கி வரும் 41 படைக்கலத் தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
திருச்சியில் செயல்பட்டுவரும் படைக்கல தொழிற்சாலை அல்லது ஆயுத தொழிற்சாலையில் தொழில் பழகுநராக பணிபுரிவதற்கான வாய்ப்பு வெளியாகியுள்ளது. எனவே பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்ற மாணவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
திருச்சியில் கடந்த 1966 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் படைக்கால தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி செயல்பட்டுவருகிறது. நாட்டில் இயங்கிவரும் 41 படைக்கலத்தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்றாகும். முந்தைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கிவைக்கப்பட்ட நிலையில் 1967 ஆம் ஆண்டு தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு சிஆர்பிஎப் வீரர்கள், மாநில காவல்துறை மற்றும் ஆர்பிஎப் காவலர் மற்றும் ரோந்து பணியில் உள்ள வீரர்களின் வசதிக்கான எளிமையாக முறையில் பாதுகாப்பு உபகரணங்களான துப்பாக்கி போன்றவற்றைத் தயாரித்துவருகிறது. சமீபத்தில் கூட திருச்சி படைக்கல தொழிற்சாலையில் நிலையான பட் மற்றும் பக்க மடிப்பு பட் ஆகிய இரண்டு வகைகளில் திருச்சி அசால்ட் ரைபிள்கள் தயாரித்துள்ளது. இங்கு பல்வேறு தொழில்நுட்பப் பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில், தற்போது பொறியியல் துறையில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்ற மாணவர்கள் தொழில் பழகுநராவதற்காக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே என்னென்ன பணி, தகுதி, சம்பளம் என்ன என்பது குறித்து அறிந்துக்கொள்வோம்.
Technical Apprentice(டிப்ளமோ) : திருச்சி ஆயுத தொழிற்சாலையில் 72 Technical Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தொழில் பழகுநராக ஆக விரும்புவோர் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிலில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆப் இன்ஸ்ட்ரூமென்டேசன், கணினி பொறியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இவர்களுக்குப் பயிற்சியின் போது மாதம் ரூபாய் 3542 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
திருச்சி ஆயுத தொழிற்சாலையில் Graduate Apprentice ஆவதற்கான தகுதிகள்: இங்கு Graduate Apprentice ஆக பயிற்சி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிலில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், எலக்ட்ரிக்கல மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆப் இன்ஸ்ட்ரூமென்டேசன், கணினி பொறியியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் 3 ஆண்டுகள் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மூலம் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: இன்ஜினியரிங்கில் டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தின் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். முதலில் நேர்முகத்தேர்விற்கு தேர்வாகும் நபர்களுக்கு அடுத்ததாக சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவர்களுக்கு திருச்சி ஆயுத தொழிற்சாலையில் தொழில் பழகுநராக நியமனம் செய்யப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு தேதி மற்றும் நடைபெறும் இடம்: விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பத்தார்களுக்க வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. இதுக்குறித்து விண்ணப்பத்தாரர்களுக்கு தகவல் அனுப்பப்படும்.
ordinary Factory, ( HRD section)
Trichy -620016,
Phone – 0431-2581291 , 0431-2581296 என்ற முகவரில் நேர்முகத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசால் நடத்தப்பட்டுவரும் ஆயுத தொழிற்சாலையில் தொழில் பழகுநர் பயிற்சியை பெற விரும்புவோர் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள். மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை அறிய www.davp.nic.in/writeread Data/ ADS/eng-10201-11-00-16-2122 என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக அறிந்துக்கொள்ளலாம்.