விழுப்புரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி.
விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் பழுது பார்ப்பவர் (பொது), இலரக மோட்டார் வாகன ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி (அழைப்பு மையம்) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி. பழனி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது சென்னை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் GS EMPOWER SKILL நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வவலை செய்பவர் (பொது), 8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு இலரக மோட்டார் வாகன ஓட்டுநர் ஆகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.
18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும்.
மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் (Apollo Hospital, National Hospital, Ezhil Hospital, Facility India – man power company etc…, TVS co Good food & laugh PEGATRAN, Horizon Packing P.Ltd Tindivanam, Suja shoes Industry – Tindivanam, SIPCOT Tindivanam, RMR Hospital – Thiruvannamalai, SPMS – Thiruvannamalai, Don Bosco - Thiruvannamalai) போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் (www.tahdco.com) மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். சி. பழனி தெரிவித்துள்ளார்.