இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் 641 டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க
பொது அறிவு, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் தலா 25 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கணினி வாயிலாகத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தில் காலியாக உள்ள 641 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் வேளாண் ஆய்வு மற்றும் கல்வித்துறையின் கீழ் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் செயல்பட்டுவருகிறது. மேலும் இக்குழுமமானது வேளாண்மையில் ஒருங்கிணைந்த, வழிநடத்தல் மற்றும் மேலாண் ஆய்வு மற்றும் கல்விப்பணிகளில் தலைசிறந்த அமைப்பாக இயங்கிவருகிறது. இதன் மூலம் தோட்டக்கலை, மீன்வளம் மற்றும் விலங்கியல் ஆகியவற்றை நாடு முழுவதும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகம் செயல்பட்டுவருகிறது. மேலும் 90-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 45 விவசாயப் பல்கலைக்கழகங்களும் இயங்கிவருகிறது. இதன் கீழ் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில், தற்போது டெக்னீசியன் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இதற்கான தகுதி ? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தில் டெக்னீசியன் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் - 641
கல்வித்தகுதி – இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணிக்கும் விண்ணப்பிக்கும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மேலும் டிகிரி முடித்தவர்கள் கூட இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்று திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் என வயது வரம்பு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/74856//Instruction.html என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக வருகின்ற ஜனவரி 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ. 1000 மற்றும் SC/ST, பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 300 விண்ணப்பக்கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழியாக எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இத்தேர்வானது பொது அறிவு, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பிரிவுகளில் தலா 25 மதிப்பெண்களுக்கு என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். தவறாக எழுதும் வினாக்களுக்கு நெகடிவ் மதிப்பெண்களும் வழங்கப்படும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://cdn.digialm.com/per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1118203919133825154477.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம். ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.