Aavin: மாதம் ரூ.43,000 ஊதியம்; திருப்பூர் ஆவினில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க!
Aavin Job: திருப்பூர் ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் வேலைவாய்ப்பு குறித்த விவங்களை இக்கட்டுரையில் காணலாம்.
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது ஆவின் (Tamil Nadu Co-operative Milk Producers' Federation Limited-AAVIN) என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் காலியாக உள்ள Input Routes, Door Step Veterinary and Emergency Health Service பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பணி:
Input Routes, Door Step Veterinary and Emergency Health Service
பணியிடங்கள்: 8
ஊதியம்
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு மாதம் 43, 000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
B.V.Sc., (கால்நடை மருத்துவ படிப்பு) மற்றும் A.H animal husbandry பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்பாடு குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது:
தங்களது சுய விவரம், மற்றும் தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்கள் சேர்ந்த விண்ணப்பத்துடன் 30.08.2022 தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்/ முகவரி:
Tirupur District Co-oprative,
Milk Producers Union Limited,
Aavin Milk Chilling Centre,
Veerapandi Pirivu,
Palladam Road,
Tirupur - 641 605
இது பற்றி கூடுதல் விவரங்களை அறிய www.aavin.tn.gov.in என்ற இணையதள முகவரியை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்