மேலும் அறிய

கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்; 22ம் தேதி திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

டாக்டர் கலைஞரின்  நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது,

22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்:

"திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பாக டாக்டர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற (22.12.2023) வெள்ளிக்கிழமை அன்று செய்யாறு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் (Government Polytechnic College) காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

இம்முகாமின் சிறப்பம்சங்கள் 100-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 5000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு திறன்மேம்பாட்டு பதிவு தொழிற் பழகுநர் பயிற்சி பதிவு மாவட்ட தொழில் மையம் தாட்கோ மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்கப்படும்.

கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்; 22ம் தேதி திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம்

சான்றிதழ்கள், ஆவணங்கள்:

வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு,10-ஆம் வகுப்பு,12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முகாம் அன்று தங்களுடைய 4 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று, கல்வி தகுதி சான்றிதழ்களின் நகலுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.

முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு"  மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்; 22ம் தேதி திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முஸ்லீம் இன மக்களின் பிரதிநிதியாக மாவட்ட காஜி நியமனம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட காஜி நியமன தேர்வுக்குழு அமைக்கப்பட உள்ளது. மேற்படி மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவில் தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவரும் 5 உலமாக்கள் உறுப்பினர்களும் மற்றும் 2 முக்கிய முஸ்லீம் பிரமுகர்களும் உறுப்பினர்களாக இடம் பெறலாம்.

எனவே மேற்படி தேர்வு குழுவில் 5 உலமாக்கள் உறுப்பினர்களாக விண்ணப்பிக்க அரசாணை எண்.30 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சென்னை நாள்:05.07.2002-இல் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஆலிம் அல்லது பாசில் அல்லது முப்தி படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும்.

கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்; 22ம் தேதி திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம்

மேலும் 2 முக்கிய முஸ்லீம் பிரமுகர்களாக விண்ணப்பிக்க சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவராகவும், சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவராகவும் சமுதாயத்தில் நல்ல மனிதர் என்று பேசப்படுபவராகவும் இருத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆலிம் படிப்பு அல்லது பாசில் படிப்பு அல்லது இஸ்லாமிய நீதித்துறை நன்கு அறிந்தவர்கள் அல்லது அரபுக்கல்லூரியிலோ அல்லது அதற்கிணையான கல்வி நிறுவனத்திலோ விரிவுரையாளராக இருந்திருக்க வேண்டும். மேற்படி தேர்வு குழுவில் இடம் பெற விரும்புவோர் மற்றும் காஜி நியமனத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் மேற்கண்ட தகுதியுடைவர்களாக இருப்பின் விண்ணப்பங்கள் மற்றும் சுயவிவரம் குறித்த விவரங்களை எழுத்து மூலமாக உரிய சான்றுகளுடன் (15.12.2023)-க்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget