மேலும் அறிய
NFT: இந்தியாவின் எதிர்காலமாகும் NFT டோக்கன்.. தெரிந்துகொள்ள வேண்டியவை என்ன?
என்.எஃப்.டி.க்கள் இந்திய கலைக்கான புதிய எல்லையாக இருக்கும் என்று மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்

என்.எஃப்.டி
NFT டோக்கன்:
இந்தியாவில் சமீப காலமாக கிரிப்டோ கரன்சி மற்றும் என் எப் டி (Non Fungible Token) பற்றி நிறைய பேசப்பட்டும், பகிரப்பட்டும் முதலீடு செய்யப்பட்டுக் கொண்டும் இருக்கிறது. என்.எஃப்.டியில் இடைத்தரகர் இல்லாமல் இருப்பது ஒரு பொருளின் விலையை உருவாக்கியவரே முழுமையாக அனுபவிப்பது உள்ளிட்டவற்றுக்கு இடம் கொடுக்கிறது. மேலும் இது ஹேக் செய்யப்பட முடியாதது. கலைப்படைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நிஜ உலக பொருட்கள், தனிநபர்களின் அடையாளங்கள், சொத்து உரிமைகள் உள்ளிட்டவற்றை பிரதிநிதித்துவப்படுத்தவும் என் எப்டிகளாக மாற்றி சந்தைப்படுத்தவும் முடியும். ஏனெனில் கிரிப்டோகரன்சிகள் இயங்க பயன்படும் BLOCKCHAIN தொழில்நுட்பம் மூலம் என் எஃப் டி செயல்படுகிறது.
சிறப்பம்சம்:
மக்கள் குறிப்பாக சொத்துக்கள் பற்றி மட்டுமல்ல, செயலாக்கம், செயல்பாடு, சமூகம் மற்றும் சந்தை ஆகியவற்றைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த டிஜிட்டல் உலகம் அதன் அனைத்து அம்சங்களிலும், தளங்களி
லும் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய முழுமையான புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் மொபைலின் மூலம் எடுக்கும் ஒரு அரிதான புகைப்படத்தை NFT-யாக மாற்ற விரும்பினால் அதை மாற்றிக் கொள்ளலாம் இதில் நமக்கு இருக்கும் மிகப்பெரிய பலம் என்னவென்றால் இந்த புகைப்படத்திற்கு உலக அளவில் நீங்கள் ஒருவர் மட்டுமே முதலாளி. இதை வேறு எவரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதே இதில் உள்ள சிறப்பம்சமாகும்.

மக்கள் டிஜிட்டல் சொத்துக்களால் உலகம் முழுவதிலிருந்து வரும் ஹேக்கிங் அச்சுறுத்தல்களை கண்டு பயந்தாலும் இந்தியாவில் பூஞ்சையற்ற டோக்கன்களில் (NFT) ஆர்வம் அதிகரித்து வருகிறது. பல்வேறு தொழில்களில் செயல்படும் தற்போதுள்ள ஏராளமான தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் தங்கள் தளங்களில் NFT-அடிப்படையிலான தயாரிப்புகளைச் சேர்த்திருப்பதால், நிதி வளர்ச்சிக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. தற்போது, இந்தியாவில், NFTகளுக்கான முக்கிய சந்தைகள் மற்றும் பயன்பாடுகளில் கேமிங், சேகரிப்புகள், நிதியாக்கம் மற்றும் சமூக வலைப்பின்னல்கள் ஆகியவை ஒரு சேர அடங்கும்.
எப்படி உருவாக்குவது:
இதைப்போலவே நீங்கள் ஒரு என்எப்டி உருவாக்க விரும்பினால் முதலில் குறிப்பிட்ட BLOCKCHAIN-ன் கிரிப்டோகரென்ஸி சிறிதேனும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். அதற்கு முதலில் நீங்கள் கிரிப்டோகரன்சி வாங்க வேண்டும். அதன் பின்னர் அந்தக் கிரிப்டோகரன்சி வைத்திருக்கும் Wallet-கு நீங்கள் வாங்கும் NFTஐ மாற்றிக் கொள்ளலாம். முதலீட்டாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இத்தகைய விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது ஆரம்ப காலங்களில் சற்று சிரமமாக இருப்பினும் போகப் போக எளிதாகிவிடும்
எதிர்காலம்:
பாலிவுட் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளவும், தங்கள் தயாரிப்புகளை வழங்கவும் தங்கள் சொந்த NFT சந்தைகளைத் தொடங்கியுள்ளனர். அமிதாப் பச்சன், சல்மான் கான், கமல்ஹாசன், யுவராஜ் சிங், ரோகித் ஷர்மா மற்றும் மனிஷ் மல்ஹோத்ரா உட்பட பல தரப்பு பிரபலங்கள் ஏற்கனவே தங்கள் டிஜிட்டல் டோக்கன்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதிலிருந்து NFT களின் எதிர்காலம் குறித்து நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும் இதில் ஆழமான ஒரு புரிதலோடு NFT -ஐ நாம் உருவாக்கினால் மிகப்பெரிய டிஜிட்டல் சொத்தினை நாம் அடையலாம். அதேநேரம் இதில் இருக்கும் ஆபத்துகளையும் நன்றாக தெரிந்து கொண்டு, பின்னர் நாம் NFT களை உருவாக்குவது சாலச் சிறந்தது.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion