India@2047 — இந்தியாவின் எதிர்காலத்தை கண்காணித்தல், மீள் எழுச்சி மற்றும் மறுசீரமைப்பு தொடர்பான பகுப்பாய்வு
ஏபிபி நாடு வாசகர்களுக்காக,( India@2047 )இந்தியாவின் சாதனைகள், பின்னடைவுகள், புதிய முடிவுகள், சவால்கள் இடையூறுகள், கொள்கைகள் பகுப்பாய்வு செய்து, தீர்வுகளை வழங்குகிறது
கனவை நோக்கி இந்தியா:
75 ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் அடைந்தபோது, நாடு ஒரு கனவைக் கொண்டிருந்தது. அமைதியான, வளமான மற்றும் முற்போக்கான இந்தியாவை உருவாக்க வேண்டும் என நினைத்தது. சுதந்திரமானது, இந்தியாவிற்கு அதிகாரத்தையும் பொறுப்பையும் கொடுத்தது. அதையடுத்து, பன்முகத்தன்மை கொண்ட இந்தியா, எதிர்காலத்தின் சவால்களை ஏற்றுக்கொண்டு, கனவை நிறைவேற்றுவதற்கான பயணத்தைத் தொடங்கியது. 34 கோடி மக்களைக் கொண்ட இளம் நாட்டிலிருந்து, தற்போது பல்வேறு சாதிகள், மதங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த 138 கோடி மக்களை கொண்ட செழிப்பான ஜனநாயகத்தில் ஒன்றாக வாழும் ஒரு தேசமாக இப்போது மாறிவிட்டோம்.
வெற்றி கதை:
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆகிய நாட்களின் நள்ளிரவின் போது, பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது புகழ்பெற்ற உரையை நிகழ்த்தினார். அப்போது நம்முடைய எதிர்காலம் எளிதானது அல்ல. ஆனால் இடைவிடாத முயற்சியின் மூலம் அடைய முடியும் என்று கூறினார். 'இடைவிடாத முயற்சியால், நாம் விரும்பியது போலவே, சில நேரங்களில் சரிந்தது, முன்னேறிச் சென்றது. மேலும் தடுமாறியது, ஆனால் அந்தக் கனவை உயிர்ப்புடன் வைத்திருந்தது. பல நூற்றாண்டுகள் அந்நிய ஆட்சி மற்றும் சூறையாடலுக்குப் பிறகு, 75 ஆண்டுகளுக்கு முன்பு "ஏழை நாடு", அதாவது மூன்றாம் உலக நாடு என்று அழைக்கப்பட்ட இந்தியா, தற்போது உலகம் வாசிக்கும் ஒரு வெற்றிக் கதையாக வளர்ந்துள்ளது.
முன்னேற்றம்:
ஒரு வறிய நாடாக பார்க்கப்பட்ட இந்தியா, தற்போது 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற விரும்பும் ஒரு நாடாக வளர்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய 75 ஆண்டு கால வரலாறானது உறுதி, லட்சியம் மற்றும் நம்பிக்கையுடன் எழுதப்பட்டுள்ளது. பல போர்கள், இயற்கை பேரழிவுகள், அரசியல் ஸ்திரமின்மைகள், தொற்றுநோய்கள் மற்றும் பொருளாதார சவால்களையும் தைரியமாக எதிர்கொண்டுள்ளது.
இருந்தபோதிலும் கல்வி முதல் சுகாதாரம் வரை, விவசாயம் முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக நலன் முதல் வெளிநாட்டு உறவுகள் வரை, பொருளாதாரம் முதல் தொண்டு மற்றும் பொழுதுபோக்கு முதல் விளையாட்டு வரை என அனைத்துத் துறைகளிலும் பெரிய முன்னேற்றங்களை இந்தியா அடைந்துள்ளது.
இந்தியா 2047:
ஆனால் கடந்த காலத்தின் மகிமையில் நாம் மூழ்கிக்கொண்டிருக்காமல், நிகழ்காலத்தை ஆராய்ந்து, எதிர்காலத்திற்கான திட்டமிடலும் முக்கியம். இந்தியா 100 வயதை எட்டும் போது, அதாவது 25 ஆண்டுகள் கழித்து எங்கே இருக்கும்? 2047-ம் ஆண்டின் இந்தியா குறித்து நமக்கு என்ன தொலைநோக்கு உள்ளது? உலகளாவிய அதிகார மையமாக மாற விரும்பும் இந்தியா, ஒட்டுமொத்த கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சியை உறுதி செய்வதன் மூலம் செழிப்பின் புதிய உயரங்களை அடையலாம், இது கொரோனா உள்ளிட்ட தொற்றுநோயின் விளைவுகளிலிருந்து அறிய முடிகிறது.
ஏ.பி.பி. லைவ் வாசகர்களுக்காக, India@2047 இந்த எழுச்சியைக் கண்காணித்து, இந்தியாவை மீண்டும் புதுப்பித்து, சாதனைகள் மற்றும் சாத்தியமான பின்னடைவுகளின் கதைகளை உங்களுக்குக் கொண்டு வரும், புதிய முடிவுகளையும் கொள்கைகளையும் பகுப்பாய்வு செய்கிறது. மேலும் வெளியிலிருந்து வரும் சவால்களையும், உள்ளிருக்கும் இடையூறுகளையும் பிரித்து, தீர்வுகளைத் தேடுகிறது.
அனைவரும் வாருங்கள், நம் அனைவரும், எதிர்காலத்திற்கான பயணத்தின் ஒரு பகுதியாக, உங்கள் கருத்துக்களையும் யோசனைகளையும் ஏ.பி.பி-யுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், நீங்கள் சொல்ல விரும்பும் கதைகளைப் பற்றி எங்களிடம் சொல்லுங்கள், உங்களுக்கு தேவைப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.
இந்த கட்டுரை குறித்து கருத்து தெரிவிக்க விரும்பினால் ட்விட்டரில் @abplive டேக் செய்து #IndiaAt2047 என்பதை பயன்படுத்தவும்.