Zerotha Employess : அரை மாச சம்பளம் போனஸா வேணுமா...? அப்போ இதைப்பண்ணுங்க..! ஜெரோதா நிறுவனத்தின் வித்தியாசமான போட்டி..!
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெரோதா தனது ஊழியர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான வித்தியாசமான போட்டியை அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருவது ஜெரோதா. இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வான நிதின் கமத் ஒரு வித்தியாசமான போட்டியை தனது ஊழியர்களுக்கு அறிவித்துள்ளார். உலக சுகாதார தினத்தை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான போட்டியை அறிவித்துள்ளது.
We are running a fun health program at @zerodhaonline. Anyone on our team with BMI <25 gets half a month's salary as bonus. The avg BMI of our team is 25.3 & if we can get to <24 by Aug, everyone gets another ½ month as a bonus. It'd be fun to compete with other companies 😁 1/3
— Nithin Kamath (@Nithin0dha) April 7, 2022
The lowest average BMI or the largest change in average BMI wins. The winner chooses a charity everyone else contributes to. Maybe a health tech company can run the initiative.
— Nithin Kamath (@Nithin0dha) April 7, 2022
If you want to do this at your company, do post in the comments.
Happy world health day! 2/3
PS: I know BMI isn’t the best measure to track health & fitness, but it is the easiest way to get started. With health & most other things in life, the most important bit is to get started.
— Nithin Kamath (@Nithin0dha) April 7, 2022
Btw, walking 10,000 steps daily is a great start if you've been wanting to get healthy 3/3
இதன்படி, உடல் ஆரோக்கியத்தை கணக்கிடும் அளவான பாடி மாஸ் இன்டக்ஸ் எனப்படும் பி.எம்.எஸ். அளவை 25-க்கும் கீழே கடைப்பிடித்தால் அரை மாத சம்பளம் போனஸாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். குறைவான பி.எம்.ஐ. அளவு உள்ள நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஜெரோதா நிறுவனம் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட இந்தியாவின் பணக்கார நிறுவனங்களின் பட்டியலில் 86வது இடத்தில் ஜெரோதா நிறுவனம் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )