World Hepatitis Day 2022 : கல்லீரலை பாதிக்கும் ஹெபடைட்டிஸ் நாள்.. பாதிப்பு எப்படி? தடுப்பது எப்படி?
உலக ஹெபடைட்டிஸ் தினத்தை முன்னிட்டு, நோயின் அபாயங்கள் மற்றும் தொற்றை தவிர்ப்பதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
உலக ஹெபடைட்டிஸ் தினம் ஜூலை 28-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைட்டிஸ் என்பது நமது கல்லீரலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் ஒரு நோயாகும். இது பல வகைகளாக உள்ளது. ஹெபடைட்டிஸின் பாதிப்பின் காரணங்களைப் புரிந்துகொள்வது இந்த நோய் தொற்று அபாயத்தைக் குறைக்க உதவும்.
எதுவெல்லாம் ரிஸ்க் ஃபாக்டர்ஸ்?
ஹெபடைட்டிஸ் ஏ, பி, சி, டி மற்றும் ஈ அனைத்தும் பல காரணங்களால் மற்றும் அபாயங்களால் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. ஹெபடைட்டிஸ் நோய்க்கான பொதுவான காரணங்களை கீழ் பட்டியலில் காணலாம்.
- ஹெபடைட்டிஸ் உள்ளவருடன் நெருக்கமான தொடர்பில் இருப்பது
ஹெபடைட்டிஸ் உள்ள ஒருவருடன் நேரடி தொடர்பில் இருந்தால் அது ஹெபடைட்டிஸ் வருவதற்கான அபாயத்தை அதிவேகமாக அதிகரிக்கும்.
- குறைந்த சுகாதாரம்
சரியான சுகாதாரம் இல்லை என்றால் ஹெபடைடிஸை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று அதிகரிக்கும்.
- கழிவு நீர்
அசுத்தமான உணவைப் போலவே, அழுக்கு நீர் ஹெபடைட்டிஸை ஏற்படுத்தும் வைரஸ்களை பரப்பும். அழுக்கு நீரைக் குடிப்பது அல்லது நீர்நிலைகளுக்கு அருகில் வாழ்வது, தொற்று ஆபத்தை அதிகரிக்கும்.
- சமைக்கப்படாத கடல் உணவு
ஷெல்ஃபிஷ் போன்ற கடல் உணவுகளை சமைக்காமல் சாப்பிட்டால் ஹெபடைட்டிஸ் அபாயத்தை அதிகரிக்கலாம். ஒழுங்காக சமைத்த மற்றும் சுத்தமான கடல் உணவை உட்கொள்வதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஹெபடைட்டிஸ் அபாயத்தை எப்படி குறைக்கலாம்?
ஹெபடைட்டிஸின் மிகவும் பொதுவான ரிஸ்க் ஃபாக்டர்ஸ் மற்றும் காரணங்களை இப்போது நாம் பார்த்தோம். இதன் தொற்றை குறைக்க நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை இப்போது காண்போம்.
- பல்வேறு வகையான ஹெபடைட்டிஸுக்கு பல்வேறு தடுப்பூசிகள் உள்ளன.
- சரியான தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பு மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாகவும் தெளிவாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- தனிப்பட்ட உடமைகளை எப்போதும் பராமரிப்பது மூலம் ஹெபடைடிஸ் மற்றும் பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
- உணவை முழுமையாக சமைப்பது அறிவுருத்தப்படுகிறது. அசுத்தமான அல்லது பச்சையான மாமிசத்தை சாப்பிடுவது ஹெபடைடிஸ் வருவதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும்.
- எப்போதும் சுத்தமான தண்ணீரை உட்கொள்ளுங்கள். சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்திற்கு நீங்கள் பயணம் செய்தால், சுத்தமான தண்ணீரை எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை நேரடியாக உட்கொள்ள வேண்டாம்.
- உங்கள் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய இடங்கள் மற்றும் விஷயங்களுடன் தொடர்பு கொள்வதற்கு முன் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், சரியான ஆராய்ச்சி செய்யவும். எடுத்துக்காட்டாக, நம்பகமான கடையில் இருந்து பச்சை குத்திக்கொள்வது போன்றவை.
இது போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் ஹெபடைட்டிஸ் தொற்றைக் குறைக்கலாம்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )