World Arthritis Day 2022: நாளை உலக ஆர்த்ரைட்டிஸ் நாள்.. மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?
World Arthritis Day 2022: ஆர்த்ரைடிஸ் குறித்தும் அந்த நோய் வருவதற்கான காரணம் குறித்தும் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துக்களை பின்வருமாறு பார்க்கலாம்.
World Arthritis Day 2022 : உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி உலக முடக்குவாத தினமாக அனுசரித்து வருகிறது. ஆர்த்ரைடிஸ் குறித்தும் அந்த நோய் வருவதற்கான காரணம் குறித்தும் மருத்துவர்கள் தெரிவித்த கருத்துக்களை பின்வருமாறு பார்க்கலாம்.
வயது முதிர்வு ஆனாலை முதலில் நமது உடலில் பாதிப்படைவது இந்த மூட்டு வலி தான். இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் வியாதிக்கு எதிரான சுகாதார அமைப்பு 1996ஆம் ஆண்டு முதல் இந்த நோயை அனுசரித்து வருகிறது. ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாத நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் அந்த நோயிலிருந்து மீள நடவடிக்கைகள் எடுக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்த மூட்டு வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். நம் அன்றாட வேலைகளை அனைத்தும் இந்த மூட்டு வலியால் முடக்கப்படுகிறது. கடினமான மற்றும் வீங்கிய மூட்டுகளுடன் எழுதிருப்பது என்பது கடுமையான உணர்வு. இதனால் சரியாக நடக்க முடியாமல் நாளுக்கு நாள் அவதிப்படுகின்றனர். இதை வைத்துக்கொண்டு தினந்தோறும் கடந்து செல்வது அவர்களின் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம் மோசமான நிலைக்கு உள்ளாகும். இத்தகைய மூட்டு வலி வருவதற்கு காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதை காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பெரும்பாலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் என கூறப்படுகிறது. பெண்கள் மற்றும் அதிக எடை கொண்டவர்களும் இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பரம்பரை மரபணுக்கள் உள்ளவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்த்ரைடிஸ் நோயின் அறிகுறிகள்
காலை எழுந்தவுடன் மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்டவோ மடக்கவோ முடியாத நிலையில் இருக்கும். இரண்டு மணி நேரத்திற்கு எந்த வேலையும் செய்ய இயலாது. தொட்டால் வலிக்கும் உள்ளேயும் வலி ஏற்படும். இதனால் கை மூட்டை அசைக்கவோ நீட்டவோ முடியாது. மூட்டுகள் வளைந்து காணப்படும்.
சில பொருட்களை தூக்குதல், நாற்காலியில் இருந்து எழுந்திருப்பது, நடப்பதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போதெல்லாம் அசைவுகளினால் மூட்டு இணைப்பு மற்றும் எலும்பு இணைப்புகளில் வலி அல்லது அழுத்தம் அதிகரித்தல் இணைப்புகளில் வீக்கம் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உரிய நேரத்தில் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது முக்கியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். ரத்தப் பரிசோதனை மூலமும் ஆர்த்ரைடிஸ் நோய் இருப்பதை கண்டறியலாம்.
ஆர்த்ரைடிஸ் எனும் முடக்கு வாத நோய்க்கான சிகிச்கை
மூட்டுவலியின் நிலை, பாதிக்கப்பட்ட மூட்டுகளின் எண்ணிக்கை, உங்கள் வயது, செயல்பாட்டின் நிலை மற்றும் பாதிக்கப்பட்ட பக்கம் ஆகியவற்றைப் பொறுத்தது. சிகிச்சை விருப்பங்களுக்கு, பிளவு/பிரேசிங், மருந்துகள் (பாராசிட்டமால், ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள், வாத எதிர்ப்பு மருந்துகள், நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். சில நேரங்களில் மூட்டுகளில் ஸ்டெராய்டுகளை ஊசி மூலம் செலுத்துவது அறிகுறிகளைக் கட்டுப்படுத்த உதவும். எலும்புகளின் முனைகளில் உள்ள குருத்தெலும்புகள் தேய்ந்துபோயிருந்தால், அறுவை சிகிச்சை செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்வது வலியை கணிசமாக குறைக்கும்.
கால்சியம் அவசியம்:
எலும்புகள் சீராக வளர கால்சியம் சத்து அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் கால்சிய குறைபாட நீங்க பால், பன்னீர், கேழ்வரகு மற்று எள் ஆகியவை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் இந்த வலி ஏற்படாமல் இருக்கும். மேலும் புகைப்பிடிப்பதை தவிக்க வேண்டும் இல்லையென்றால் மூட்டுவலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தசைகள் வலுவாகவும், மூட்டுகள் நெகிழ்வாகவும் இருக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )