மேலும் அறிய

தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறதா லாங் கோவிட்? : ஆய்வுகள் சொல்வது என்ன?

வைரஸ் மூளை உயிரியலை மாற்றுவதால் நோயாளிகளிடையே தற்கொலை ஆபத்து அதிகரிக்குமா?

2020 மார்ச் மாத காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட  56 வயதான நபர் ஒருவர், 18 மாதங்களுக்குப் பிறகும் குணமடையவில்லை, இதனால் அவர் டல்லாஸுக்கு அருகிலுள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். நாட்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவருக்கு நினைவு தப்புதல் உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தன. 

"யாரும் கவலைப்படுவதில்லை. யாரும் என் நிலை குறித்துக் கேட்க நேரம் ஒதுக்க விரும்பவில்லை," என்று டெய்லர் ஒரு நண்பருக்குத் தனது இறுதி உரையில் எழுதியுள்ளார், நீண்ட நாட்ப்பட்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கானவர்களின் சார்பாகத் தனது அவலநிலையைப் பற்றி பேசியிருக்கும் அவர் பல ஆண்டுகள் அல்லது மாதக்கணக்கில் நீடிக்கும் அந்தத் தொற்று பற்றி விவரித்துள்ளார்.

"முழுமையான சோர்வு, வலி, அயற்சி, முதுகுத்தண்டின் மேல் மற்றும் கீழ் பகுதிகளில் வலி இல்லாமல் என்னால் சலவை கூடச் செய்ய முடியாது. உலகமே சுற்றுவது போலத் தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது. நான் ஏதோ சில விஷயங்களைச் சொல்கிறேன், ஆனால் என்ன சொல்கிறேன் என்று தெரியவில்லை," என அவர் தனது டெக்ஸ்ட்டில் குறிப்பிட்டுள்ளார்.

தற்கொலை எண்ணத்தைத் தூண்டுகிறதா லாங் கோவிட்? : ஆய்வுகள் சொல்வது என்ன? 

லாங் கோவிட் என்பது ஒரு சிக்கலான மருத்துவ நிலை, இது 200 க்கும் மேற்பட்ட அறிகுறிகளைக் கொண்டிருப்பதால் கண்டறிய கடினமாக உள்ளது சோர்வு மற்றும் அறிவாற்றல் குறைபாடு முதல் வலி, காய்ச்சல் மற்றும் இதயத் துடிப்பு வரை இதற்கான அறிகுறிகள் உலக சுகாதார மையத்தின் பட்டியலின்படி ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 

பாதிக்கப்பட்டவர்களிடையே தற்கொலைகளின் அதிகரிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தரவு எதுவும் இல்லை. யு.எஸ். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மற்றும் பிரிட்டனின் தரவு சேகரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் பல விஞ்ஞானிகள், நீண்டகால கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள் அதிகரித்ததற்கான சான்றுகளைத் தொடர்ந்து அதற்கான சாத்தியமான இணைப்பைப் படிக்கத் தொடங்கியுள்ளனர். இத்துடன் அறியப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

"கோவிட் நீண்ட காலமாக தற்கொலை எண்ணங்கள், தற்கொலை முயற்சிகள், தற்கொலைத் திட்டங்கள் மற்றும் தற்கொலை மரண அபாயத்துடன் தொடர்புடையது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருந்தாலும் எங்களிடம் தொற்றுநோயியல் தரவு இல்லை," என்று நியூவில் உள்ள மவுண்ட் சினாய் ஹெல்த் சிஸ்டத்தின் மனநல மருத்துவர் லியோ ஷெர் கூறுகிறார். வைரஸ் மூளை உயிரியலை மாற்றுவதால் நோயாளிகளிடையே தற்கொலை ஆபத்து அதிகரிக்குமா? அல்லது மற்ற நீண்ட கால சுகாதார நிலைமைகளில் நிகழக்கூடியது போல், நோய்க்கு முந்தைய காலத்தில் அவர்கள் செய்ததைப் போலவே தற்போதும் செயல்படும் திறனை இழப்பது மக்களை விளிம்பிற்குத் தள்ளுமா? உள்ளிட்ட முக்கியக் கேள்விகள் தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. 

"நாம் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்," என்று மருத்துவர் லியோ ஷெர் மேலும் கூறினார்.

சியாட்டிலை தளமாகக் கொண்ட சுகாதாரத் தரவு நிறுவனமான ட்ருவேட்டாவால் நடத்தப்பட்ட ராய்ட்டர்ஸ் பகுப்பாய்வில், நீண்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கோவிட் நோயால் கண்டறியப்பட்டவர்களுடன் ஒப்பிடும்போது, ​​ஆரம்ப கோவிட் நோயறிதலின் 90 நாட்களுக்குள் முதல் முறையாக ஆண்டிடிரஸன் மருந்துகளைப் பெறுவதற்கு கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதாகக் காட்டுகிறது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
 
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget