சிறுநீரை அடக்காதீங்க! அபாயத்தை உண்டாக்கும் பல சிக்கல் வரும்.. இதைப் படிங்க முதல்ல!
சிறுநீர் கழிப்பதை அடக்கி வைக்கவே கூடாது. அதை அடக்கி வைத்தால் உடலில் பல்வேறு உபாதைகளும் ஏற்படும். அது குறித்த எச்சரிக்கைக் கட்டுரை தான் இது.
சிறுநீர் கழிப்பதை அடக்கி வைக்கவே கூடாது. அதை அடக்கி வைத்தால் உடலில் பல்வேறு உபாதைகளும் ஏற்படும். அது குறித்த எச்சரிக்கைக் கட்டுரை தான் இது. பொதுவாகவே நான் வீட்டு டாய்லெட் தவிர வேறு யூஸ் பண்ண மாட்டேன், பள்ளி, கல்லூரியில் ஓயாமல் சிறுநீர் கழிக்க பாத்ரூம் செல்ல அனுமதிக்கமாட்டார்கள், அலுவலக வேலை கெட்டுவிடும் என்பதால் அடக்கிக் கொள்வேன் என்று சாக்கு சொல்பவரா நீங்கள். அப்படியென்றால் இந்த கட்டுரையை வாசித்த பின்னர் நீங்கள் திறந்தலாம்.
தூய்மைப் பணியாளர்:
நம் உடலில் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு தொழிலை செய்கிறது. அதில் சிறுநீரகத்தின் வேலை தூய்மை பணியாளர் வேலையை ஒத்தது. அந்த வகையில் சிறுநீரகம் உடலில் மிக முக்கியமான பணியை செய்கிறது. உண்ணும் உணவில் இருக்கும் கழிவுகளை பிரித்து வெளியே அனுப்புகிறது. உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துகளை இரத்தத்தில் செலுத்தி , கழுவுகளை பிரித்து, சிறுநீரக வெளியே அனுப்புகிறது.
இந்த உறுப்பை தெரியாமல் சில அன்றாட பழக்க வழக்கங்களினால், கெடுத்து கொண்டு இருக்கிறது. இதனால் ஒவ்வாமை, தொற்று நோய்கள், சிறுநீரக கல், நாளடைவில் இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்து சிறுநீரகம் செய்யும் வேலையை வெளியே வெளியில் இருந்து ஒரு கருவி பொருத்தி செய்யும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
நீங்கள் சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஐந்து பக்க விளைவுகளின் பட்டியல்:
1. சிறுநீர் கற்கள்:
சிறுநீரை அவ்வப்போது வெளியாற்றாவிட்டால் உடலில் கழிவுகள் சேர்ந்து அது கற்களாக உருவாகும். அந்த கற்கள் அளவில் பெரிதாக பெரிதாக வலியும் தொந்தரவும் அதிகமாகும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அகற்றும் நிலையும் வரும். கற்களால் சிறுநீரில் ரத்தம், சிறுநீரக தொற்று ஆகியன ஏற்படும். கற்களுக்கு முக்கியக் காரணம் தண்ணீர் சரியாக அருந்தாது, சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பது.
2. சிறுநீரக தொற்று:
நீங்கள் அதிக நேரம் சிறுநீரை அடக்கிவைத்தால் உங்களுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதையில் இருக்கும் பாக்டீரியாக்கள் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் நீங்கள் சிறுநீர் கழிப்பதை தவிர்த்தால் அந்தக் கிருமி சிறுநீர் பாதை தொற்றை உருவாக்கும். இது மிகவும் வலி ஏற்படுத்துவதாகவும் அடிக்கடி திரும்ப வருவதாகவும் அமைந்துவிடும். UTI யூனிரரி ட்ராக்ட் இன்ஃபக்ஷன், உலகளவில் அதிகபேர் பாதிக்கப்படும் நோய் இதுவாகத்தான் உள்ளது.
3. பர்ஸ்ட் ப்ளாடர்:
இது சற்று அரிதாகவே ஏற்படுகிறது. நீங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் சிறுநீரை அடக்கி வைக்கும்போது பிளாடர் எனப்படும் சிறுநீர் சேரும் பை வெடித்துவிடும் அபாயம் உள்ளது. ப்ளாடர் நிறைந்தவுடன் அது விரிந்துவிடுகிறது. அதிலிருந்து சிறுநீர் வெளியேறியவுடன் அது மீண்டும் ஒரிஜினல் ஷேப்பிற்கு திரும்பிவிடுகிறது.
4.வலியுடன் சிறுநீர் கழித்தல்:
சிறுநீர் கழிக்கும் உணர்வு இயல்பு. சிறுநீரை அடக்கி வைத்தால் பின்னர் நம் தோதுக்கு சிறுநீரை வெளியேற்றும்போது வலி ஏற்படும்.
5.சிறுநீர் கசிவு:
சிறுநீரை அடக்கி வைத்தால் அது பெல்விக் ஃப்ளோர் மசில்ஸை மிகவும் வலிமையிழந்ததாக ஆக்கிவிடும். இதனால் வலி அதிகரிக்கும். இது தொந்தரவானதாகவும், கொஞ்சம் தர்மசங்கடமான நிலைக்கும் நம்மை தள்ளும்.
இது போன்ற உபாதைகளை தவிர்க்க சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்காதீர்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )