Benefits Of Jeera Water: காலையிலேயே சீரகத்தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மை இருக்கா? இனி இதை ட்ரை பண்ணுங்க!
Benefits Of Jeera Water: சீரகத்தண்ணீரால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
சீரகத்தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
காலையிலேயே டீ, காபி என எப்போதும் ஒரே டிரிங்கை குடிப்பதுதான் நமது வழக்கம். டீ, காபியில் ஒரு வித உத்வேகம் இருந்தாலும் காலையில் சீரகத் தண்ணீர் குடிப்பது மிக நல்லதாம். காலையிலேயே சீரகத்தண்ணீர் குடிப்பது ஜீரண சக்தியை அதிகரிப்பதோடு, உடலின் எடையை குறைக்கவும் உதவுகிறது.
தினமும் ஒரு டம்ளர் சீரக தண்ணீரை குடித்து வரும் போது, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அது அதிகரிக்க உதவும்.
சீரக தண்ணீரில் தைமோகுவினான் என்ற இரசாயன கலவை உள்ளது. இந்தக்கலவை நமது கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
View this post on Instagram
கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் எடையை குறைக்க உதவும் என்சைம்களை உள்ளடக்கிய சீரக தண்ணீர் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சரிவர ஒழுங்குப்படுத்துவதற்கும் சீரகத்தண்ணீர் உதவுகிறது.
சீரகத்தண்ணீரில் அதிகளவு அயன் சத்து இருப்பதால், கர்ப்பிணி பெண்களுக்கு இது ஆரோக்கிய பானமாக இருக்கிறது. இதுமட்டுமன்றி, பாலூட்டும் சுரப்பிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் சீரகத்தண்ணீர் கொடுக்கிறதாம்.
இதில் அடங்கியிருக்கும் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் தோலின் மறுசீரமைப்பிற்கு பெரிதும் உதவிபுரிகிறது. அதே போல முகப்பருக்களை நீக்குவதோடு, தோல் பளப்பளப்பாக இருக்கவும் உதவுகிறது.
View this post on Instagram
சீரகத்தண்ணீரில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் முடி நன்கு வளர உதவுவதோடு, முடி உதிர்வையும் தடுக்கிறது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )