Avacado Benefits : அவகாடோ என்று அழைக்கப்படும் பட்டர் பழம் : என்னென்ன விஷயங்களுக்கு பலன் கொடுக்கும்னு தெரியுமா?
அமெரிக்காவில் கலிபோர்னியாவில்தான் அதிகமான அவகாடோ தோட்டங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 5000-க்கும் அதிகமான தோட்டங்கள் வருடம் ஒன்றிற்கு 400 மில்லியன் பவுண்டுகள் அவகாடோ பழங்களை உற்பத்தி செய்கின்றன.
அவகாடோ பழங்கள் பெர்ரி வகையைச் சார்ந்தவை. கிட்டத்தட்ட எந்த சுவையுமே இல்லாத சதையைக் கொண்டுள்ளதே இதனுடைய தனித்துவமாக இருக்கிறது, அதனாலேயே கிட்டத்தட்ட அனைத்து உணவுப் பொருளிலும் இதை சேர்த்துக்கொள்ள முடிகிறது. ஆனால், சுவையற்ற இதன் தன்மையால் இது சத்துகள் பெரும்பாலும் இல்லாத உணவு என்று சொல்லி விடவே முடியாது, அரிதான பல சத்துகள் நிரம்பியிருக்கும் பழவகை இது.
அவகாடோ பழங்களின் தோற்றம் மெக்சிகோ, மத்திய அமெரிக்காவில் இருந்தாலும் இதனுடைய உற்பத்தி இன்று வட அமெரிக்காவிலும் பரவிவிட்டது. அமெரிக்காவில் கலிபோர்னியாவில்தான் அதிகமான அவகாடோ தோட்டங்கள் இருக்கின்றன. கிட்டத்தட்ட 5000-க்கும் அதிகமான தோட்டங்கள் வருடம் ஒன்றிற்கு 400 மில்லியன் பவுண்டுகள் அவகாடோ பழங்களை உற்பத்தி செய்கின்றன.
பலன்கள்:
அரிதான சத்துக்கள்
அவகாடோ பழங்களில் பல அரிதான சத்துகள் ஒரு சேரக் கிடைக்கும். உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து, பொட்டாஷியம், வைட்டமின்கள், நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது.
ஜீரண மேம்பாடு
அவகாடோவில் நிறைந்திருக்கும் சத்துகள் குடலுக்கு அதி அவசியத் தேவை என்றே சொல்லலாம். நார்ச் சத்து குவிந்திருப்பது அதற்கு ஒரு முக்கிய காரணம்.
இதய வலு
பலகட்ட ஆராய்ச்சியில் அவகாடோ பழங்கள் இதயத்தை காக்கும், வலுப்படுத்தும் அருமருந்து என்பதை தெரிவித்துள்ளன.
எதிர்ப்புத் திறன்
தொடர்ந்து அவகாடோ பழங்களை உண்டு வருபவரின் உடலில் எதிர்ப்புத் திறன் வியக்கும் வகையில் அதிகரித்திருப்பது இந்த பழங்களின் மற்றொரு அரிய பலன்.
உடல் எடை
நார்ச் சத்து நிறைந்திருக்கும் உணவுகள் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. நார்ச் சத்துடன் சேர்ந்து மேலும் பல பலன்களைக் கொண்டிருக்கும் இந்த அவகாடோ உடலுக்குத் தேவையான சத்துகளை ஒருசேர எடுத்துக் கொடுப்பதில் தனித்து விளங்குகிறது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும், இந்த பழங்களின் தனித்துவமான சத்துக்கள் பாலூட்டும் காலத்திலும், கர்ப்பக் காலத்திலும் உடலை உறுதிப்படுத்துவதில் முதலிடத்தில் இருக்கின்றன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )