![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gem Hospital: பிரத்யேக பெண்கள் வார்டு.. மகப்பேறுக்கென தனி மையம்.. ஜெம் மருத்துவமனையின் புது தனிச்சிறப்பு..
ஜெம் மருத்துவமனை பிரத்யேகமான பெண்கள் வார்டுடன் கூடிய மகப்பேறு துறையை தொடங்கியுள்ளது.
![Gem Hospital: பிரத்யேக பெண்கள் வார்டு.. மகப்பேறுக்கென தனி மையம்.. ஜெம் மருத்துவமனையின் புது தனிச்சிறப்பு.. Gem Hospital has launched a maternity department with a dedicated women's ward Gem Hospital: பிரத்யேக பெண்கள் வார்டு.. மகப்பேறுக்கென தனி மையம்.. ஜெம் மருத்துவமனையின் புது தனிச்சிறப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/13/421ad0c3b32dfa3484ee5b57c6b9b6711663060755151175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சிறந்த மகப்பேறு மைய வசதிகள் மற்றும் பிரத்தியேகமான பெண்கள் வார்டுகளுடன் கூடிய விரிவான பெண்கள் பராமரிப்பு மையத்தை ஜெம் மருத்துவமனை தொடங்கியுள்ளது.
சென்னை 12 செப்டம்பர் 2022: சென்னையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் ‘மகப்பேறு துறை மற்றும் பிரத்தியேக மகளிர் வார்டு' மையத்தை புகழ்பெற்ற தமிழ் சொற்பொழிவாளர், பேச்சாளர் மற்றும் தொகுப்பாளர் திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
ஒரு விரிவான பெண்கள் பராமரிப்பு மையத்தை திறந்து பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தொடர்ந்து பங்களிப்பதற்காக ஜெம் மருத்துவமனைக்கு திருமதி பாரதி பாஸ்கர் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்தார். லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை துறையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்ததற்காக ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்,சி பழனிவேலுவை அவர் மேலும் பாராட்டினார்.
ஜெம் மருத்துவமனைகளின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலு கூறுகையில், "ஜெம் மருத்துவமனை 30 ஆண்டுகளாக பெண்களுக்கு பிரத்தியோ மகளிர் அறுவை சிகிச்சை சேவையை வழங்கி வருகிறது. எங்கள் மகப்பேறியல் துறையை அதிநவீன பணியாளர் தொகுப்புகள் மற்றும் பிரத்தியேகமான பெண்கள் வார்டுகளுடன் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஜெம் மருத்துவமனையில் உள்ள வலுவான ஓபிஜி மற்றும் ஐசியூ குழு. சிக்கலான தாய்-கரு நிலைமைகளை கொண்ட கர்ப்பிணி பெண்களை சிறப்பு பராமரிப்பில் கண்காணித்து அதிக பிரச்சினை கொண்ட கர்ப்பங்களுக்கு சிறந்த கவனிப்பை வழங்கும்".
சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ், அசோகன் கூறுகையில் ஜெம் மருத்துவமனையில் உள்ள மகப்பேறியல் துறையானது லெவல்1 என்ஐசியூ அமைப்பு 24/7 தீவிர சிகிச்சை மருத்துவர்கள் கொண்ட ஐசியூ உள்ளது மேலும் கர்ப்ப காலத்தில் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை செய்யும் வசதியும் உள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட எங்கள் மையம், பெண்களுக்கு பிரத்தியேகமான பெண்கள் வார்டுடன் தனியுரிமையை வழங்கும்".
ஜெம் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பி. செந்தில்நாதன் கூறுகையில், "ஜெம் மகளிர் மருத்துவ நிபுணர் குழு, அவர்களின் நோயாளிகளுக்கு தனிப்பட்ட கவனிப்பை வழங்குவதற்கும், பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை பெற வேண்டியதன் அவசியத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
ஜெம் மருத்துவமனையானது லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோ மூலம் கருப்பை மற்றும் கருப்பை குழாயில் நார்த்திசு கட்டி மற்றும் புற்றுநோயை அகற்றுவதில் சிறந்து விளங்குகிறது. இந்த துறையில் உள்ள எங்கள் அனுபலம் வாய்ந்த பெண் டாக்டர்கள் குழுவில் டாக்டர் ஆர். கார்த்திகாலேப்ராஸ்கோபி மற்றும் ரோபோட்டிக் மகப்பேறு மருத்துவர், டாக்டர், அனிதா, மகப்பேறு மருத்துவர், டாக்டர். நிவேதிதா மற்றும் டாக்டர். ருக்கயல் பாத்திமா மகப்பேறு மருத்துவம், டாக்டர். வான்மதி வலி மருந்து மற்றும் மயக்க மருந்து நிபுணர், டாக்டர். டெல்பின் சுப்ரியா மகப்பேறு ஆன்கோசர்ஜரி" ஆகியோர் உள்ளனர்.
"எங்கள் பிரத்தியேகமான பெண்கள் வார்டு மார்பகம் தொடர்பான நோய்களுக்கும் அனைத்து மகளிர் உடல்நலப் பிரச்சினைகளுக்கும் வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையை வழங்குவதற்கான ஒரு தீர்வாக இருக்கும்" என்று அவர் மேலும் கூறினார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)