மேலும் அறிய

Condom: காண்டம் தெரியும்.. இந்தக்கதையெல்லாம் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!!

காண்டம் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்....

இந்தியாவில் இன்றுவரை ‘காண்டம்’ என்ற சொல் தவறாக பார்க்கப்படும் ஒன்றாகவே நீடிக்கிறது. இன்னும் சிலருக்கு காண்டம் பயன்பாடு இன்னதென தெரியாது. அப்படி இருந்தாலும், காண்டம் பயன்படுத்துவது சரி என்று சொல்பவர்கள் சிலரே. ஏன், தொலைக்காட்சிகளில், விளம்பர இடைவேளைகளில் காண்டம் பற்றிய விளம்பரம் வந்தாலே அந்த சேனலை மாற்றிவிடுவோம்தானே.  காண்டம் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அதனை பற்றிய விழிப்புணர்வு அவசியமாகிறது. மேலும், ஆணுறை, பெண்ணுறை குறித்த சந்தேகங்கள் எழுவது இயல்பானதுதான். அதில் தெளிவு பெற மருத்துவர்கள், சரியான தகவல்கள் கிடைக்கும் இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தலாம்.  

உலக அளவில் காண்டம் பயன்பாடு தொடங்கிய காலம் என்றால், சுமார் 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டுகளில் இருக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கரு உருவாவதைத் தடுப்பதற்கு மனிதனின் காண்டம் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது 19வது நூற்றாண்டில்தான். அதிலிருந்து இன்றுவரை காண்டம் தயாரிப்புகளில் பல்வேறு வகையிலான முன்னேற்றங்கள் நடந்துள்ளது.  

கி.பி 1600 காலகட்டத்தில் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் தன்னை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து கொள்வதற்காக ஓர் உபகரணம் செய்து தருமாறு அரசவை மருத்துவராக இருந்த காண்டத்திடம் வேண்டினார். அதனால், அவர் ஆட்டின் குடலினால் ஆன ஆணுறையை தயாரித்துக் கொடுத்துள்ளார். இதனாலேயே அதற்கு அந்தப் பெயர் வந்தது எனப் பலர் சொல்கின்றனர்.

கி.பி 1600-லிருந்து கி.பி 1800 காலகட்டங்கள் வரை ஆடுகளின் குடல்களைக் கொண்டும், விலங்குகளின் தோல்களைக் கொண்டும் ஆணுறைகள் தயாரிக்கப்பட்டன. 1840-ம் ஆண்டு ஆணுறைகளின் தேவை அதிகமானதால் ரப்பரால் ஆன ஆணுறைகள் சந்தைக்கு வந்தன. பின்பு 1930-களில் லேடெக்ஸ் எனும் ரப்பர் தொழில்நுட்பம் வந்தபிறகு, மெலிதான ஆணுறைகள் தயாரிக்கப்பட்டன. இன்றைய காலத்தில் சந்தையில் விற்கப்படும் ஆணுறைகள் பாலியூரித்தேன் கொண்டு உருவாக்கப்பட்டவை. இவை டியூரான் எனப்படுகிறது.

Condom: காண்டம் தெரியும்.. இந்தக்கதையெல்லாம் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!!

தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்:

  • ஆணுறை /பெண்ணுறை என்பது தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க பயன்படுத்தும் ஒரு தடுப்பு முறை ஆகும்.
  • காண்டம் பயன்படுத்துவதால் பாலியல் தொடர்பான நோய்கள் பரவுவதும் தடுக்கப்படுகிறது.
  • முறையாக காண்டம் பயன்படுத்துவதால், 98 சதவீதம் கரு உருவாதலையும், பாலியல் தொற்றையும் தடுக்க முடியும்.
  • பெரும்பாலான ஆணுறைகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருந்தாலும், சிலவற்றில் உள்ள லேட்டக்ஸ் அலர்ஜியாலும், Nonoxynol-9 (N-9) எனப்படும் கலவை இருப்பதாலும், அல்லது சரியான லூப்ரிகேஷன் இல்லாததாலும் வலி மற்றும் அசௌகரியம் ஏற்படலாம்.
  • காண்டம் முறைப்படி அணிவதால் மட்டுமே பாலியல் தொற்று நோயுகள், மற்றும் திட்டமிடாதா கர்ப்பத்தை தடுக்க முடியும்.
  • காண்டம்களில் தரமானவற்றை மட்டுமே உபயோகிப்பது நல்லது.
  • இரண்டு ஆணுறைகளை ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தினால் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்தானே என்று நினைக்கிறீர்கள். அது உண்மை இல்லை என்கின்றன நிபுணர்கள். ஆணுறைகள் ஒன்றுக்கொன்று உராய்வு ஏற்பட்டு இரண்டும் கிழிவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். அப்படி கிழிந்து போனால் ஆணுறை பயன்படுத்துவதே வீண்.
  • ஒரு முறை பயன்படுத்திய காண்டம், மீண்டும் பயன்படுத்தலாமா என்ற சந்தேகமே உங்களுக்கு வேண்டும். நிச்சயமாக பயன்படுத்தக் கூடாது.
  • உங்கள் பெண் பார்ட்னர் கரு உருவாதலைத் தடுக்க மாத்திரை உட்கொண்டிருந்தாலும், நீங்கள் ஆணுறை அணிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
  • Warts, herpes போன்ற sexually transmitted infections (STI) போன்ற உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள் காண்டம் பயன்படுத்தினாலும் வரக்கூடும். ஏனெனில், இவை சருமத்தின் மூலம் பரவும் ஒன்றாகும்.
  • காண்டம் பயன்படுத்தும் முன்பு அதன் காலாவதி நாள் குறித்து தெரிந்து கொள்ளவும். வாங்கி நீண்ட நாள் ஆன காண்டங்களை பயன்படுத்த கூடாது.
  • காண்டம் பாதுகாப்பான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும்.
  • எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி உள்ளடவைகளால் ஆன லூப்ரிகென்ட் பயன்படுத்துவதால் காண்டம் பாதிப்படையக்கூடும். அதானால், சிலிக்கான் மற்றும் வாட்டர் பேஸ்டு லூப்ரிகென்ட்களை பயன்படுத்த வேண்டும்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget