(Source: ECI/ABP News/ABP Majha)
கோவை மண்டலத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் என்ன?
கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து அதிக கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. அதேசமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜீன் மாதத்தில் இறங்கு முகத்தில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
கோவையில் இன்று 870 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 14 ஆயிரத்து 256 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 8373 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 2046 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 3 ஆயிரத்து 953 பேராக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா தொற்றால் இன்று 19 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1930 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோடு, திருப்பூர், நீலகிரி நிலவரம்
தினசரி கொரொனா பாதிப்பில் ஈரோடு தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்று 741 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 1855 பேர் குணமடைந்துள்ள நிலையில், 5942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 85 ஆயிரத்து 184 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்புகள் 559 ஆக உயர்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 434 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். 919 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 79621 ஆகவும், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 76061 ஆகவும், மொத்த உயிரிழப்பு 712 ஆகவும் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இன்று 139 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 381 பேர் குணமடைந்துள்ளனர். 2 பேர் உயிரிழந்தனர். 1391 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்புகள் 27464 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25921 ஆகவும், உயிரிழப்புகள் 152 ஆகவும் உள்ளது.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர் நிலவரம்
சேலம் மாவட்டத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் இன்றைய பாதிப்பில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. 817 பேர் குணமடைந்துள்ள நிலையில், 3696 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 84826 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 79722 ஆகவும், உயிரிழப்புகள் 1408 ஆகவும் உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 104 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 208 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 23641 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 22405 ஆகவும், உயிரிழப்புகள் 193 ஆகவும் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 274 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 313 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2254 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்புகள் 42995 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40352 ஆகவும், உயிரிழப்புகள் 389 ஆகவும் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இன்று 94 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 87 பேர் குணமடைந்துள்ள நிலையில், 777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளார். மொத்த பாதிப்புகள் 21582 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20472 ஆகவும், உயிரிழப்புகள் 333 ஆகவும் உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )